தட்டுப் புவிப்பொறை உள்ளிடை நிலநடுக்கம்![]() தட்டுப் புவிப்பொறை உள்ளிடை நிலநடுக்கம் (intraplate earthquake) என்பது தட்டுப் புவிப்பொறை ஒன்றினுள்ளே நிகழும் நிலநடுக்கம் ஆகும். இதற்கு எதிராக இரு புவிப்பொறைகளின் எல்லையில் நிகழும் நிலநடுக்கம் தட்டுப் புவிப்பொறையிடை நிலநடுக்கம் என்றழைக்கப்படுகிறது. புவிப்பொறைகளின் விளிம்பில் ஏற்படும் நிலநடுக்கங்களை விட ஒரு புவிப்பொறையின் உள்ளேயே நிகழும் இவ்வகை நிலநடுக்கங்கள் அரிதானவை. இருப்பினும் பெரும் புவிப்பொறை உள்ளிடை நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியன. இத்தகைய நிலப்பகுதி நிலநடுக்கங்களுக்கு பழக்கப்படாதிருப்பதாலும் கட்டிடங்கள் நில அதிர்வுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படாதிருப்பதாலும் மிகுந்த சேதம் விளைகிறது. குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக குசராத்தில் 2001ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், 1812ஆம் ஆண்டின் நியூ மாட்ரிட் நில நடுக்கம், 1886ஆம் ஆண்டின் சார்லஸ்டன் நிலநடுக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia