தன்னம்பிக்கை![]() தன்னம்பிக்கை (Confidence) என்பது சரியான கணிப்பு அல்லது தான் தேர்வு செய்த செயல் சிறந்தது அல்லது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெளிவாக இருக்கும் நிலையாகும். நம்பிக்கை என்பது இலத்தீன் வார்த்தையான"பிடரே' என்பதிலிருந்து வந்தது, இதற்கு "நம்புவது" எனப் பொருள்படும்; எனவே, தன்னம்பிக்கை என்பது ஒருவர் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையினைக் குறிப்பதாகும். அதீத நம்பிக்கை அல்லது தற்பெருமை என்பது தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையினைக் குறிப்பதாகும். தன்னம்பிக்கை என்ற கருத்து பொதுவாக ஒருவரின் மதிப்பீடு, திறன், சக்தி போன்றவற்றில் இருக்கும் தனிப்பட்ட நம்பிக்கை என வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட செயல்பாடுகளை திருப்திகரமாக முடித்த அனுபவத்தின் விளைவாக ஒருவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. [1] தன்னம்பிக்கை என்பது எதிர்காலத்தில், பொதுவாக ஒருவர் செய்ய விரும்புவதைச் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான நம்பிக்கையை உள்ளடக்கியது.[2] தன்னம்பிக்கை என்பது சுயமரியாதைக்கு சமமானதல்ல, இது ஒருவரின் சொந்த மதிப்பீடாகும், அதேசமயம் தன்னம்பிக்கை என்பது சில இலக்கை அடைவதற்கான ஒருவரின் திறனில் இருக்கும் நம்பிக்கையாகும். ஆபிரகாம் மாசுலோ மற்றும் அவருக்குப் பிறகான பலர் தன்னம்பிக்கை என்பதனை பொதுவான ஆளுமைப் பண்பிற்கும், ஒரு குறிப்பிட்ட பணி, திறன் அல்லது சவால் தொடர்பான தன்னம்பிக்கையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். உளவியலாளர் ஆல்பர்ட் பாண்டுரா, "குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வெற்றிபெற அல்லது ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான ஒருவரின் திறமையின் மீதான நம்பிக்கை" என வரையறுத்துள்ளார்.[3] வரலாறுதன்னம்பிக்கையின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய ஆங்கில மொழிப் பதிப்புகளில் "இது கடவுளின் புனிதத்துவத்தைப் பாழாக்குகிற நடைமுறைகள்" எனக் குறிப்பிட்டுள்ளது. [4] [5] வெவ்வேறு வகைப்பட்ட குழுக்களில் மாறுபாடுசமூக அறிவியலாளர்கள் வெவ்வேறு வகை மக்களில் தன்னம்பிக்கை வித்தியாசமாக செயல்படுவதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தைகள்குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் இருந்தால், அவர்கள் எதிர்காலத்தில் பெறப்போகும் வெற்றிகளுக்காக தங்களின் பொழுதுபோக்கிற்காக செலவளிக்கும் நேரத்தை தியாகம் செய்து, அவர்களின் சுய-கட்டுப்பாட்டு திறனை மேம்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது என ஜிம்மர்மேன் கூறினார். [6] இளமைப் பருவத்தில், நண்பர்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளாத இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். [7] இசையில் சிறபாக செயல்படும் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரித்து, படிப்பிற்கான ஊக்கத்தை அதிகரிக்கிறது. [8] [9] பெரியவர்களை விட குழந்தையாக இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை வித்தியாசமாக வெளிப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழுவாக உள்ள குழந்தைகள் மட்டுமே மற்ற குழந்தைகளை விட தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்று ஃபென்டன் பரிந்துரைத்தார். [10] மாணவர்கள்பல மாணவர்கள் பள்ளியில் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். பொதுவாக, தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மாணவர்கள் தங்களது பணிகளை வெற்றிகரமாக முடிக்கவும், பொறுப்பாகச் செயல்படவும் மாணவர்களை ஊக்குவிக்கும். [11] சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள் அதிக நேர்மறையான மதிப்பீட்டு அறிக்கையையும் அதிக தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள். [12] பள்ளியில் மட்டுமே கல்வி இணைச் செயல்பாடுகள் மாணவர்களின் தன்னம்பிக்கையினை அதிகரிக்கும். இதில், விளையாட்டுகளில் பங்கேற்பது, காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகள் மற்றும் மேடைப் பேச்சு ஆகியவை அடங்கும். [13] ஆண்கள் எதிர் பெண்கள்ஆண் பொதுப் பங்கு முதலீட்டாளர்கள் சக பெண் பங்குதாரர்களை விட 45% அதிகமாக வர்த்தகம் செய்வதை பார்பர் மற்றும் ஒடியன் கண்டறிந்துள்ளனர், ஆண்களின் நிகர வருவாய் வருடத்திற்கு 2.65 சதவீத புள்ளிகள் மற்றும் பெண்களின் 1.72 சதவீத புள்ளிகளாக இருப்பதனைக் கண்டறிந்துள்ளனர். [14] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia