தமதேதவோ வானூர்தி நிலையம்
மாஸ்கோ தமதேதவோ வானூர்தி நிலையம் (உருசியம்: Московский аэропорт Домодедово மஸ்கொவ்ஸ்க்கி அயெரபோர்த் தமதேதவா) உருசியாவின் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியான தமதேதவ்ஸ்க்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். மாஸ்கோ நகரின் மையத்திலிருந்து 42 கி.மீ. (26 மைல்) தொலைவில் உள்ளது. உருசியாவின் வானூர்தி நிலையங்களிலேயே பயணிகளின் எண்ணிக்கை கொண்டும் பொருட்களின் போக்குவரத்தைக் கொண்டும் மிகப்பெரும் வானூர்தி நிலையமாகும்(2009ஆம் ஆண்டை விட 19.2% கூடுதலாக 22.5 மில்லியன் பயணிகள் 2010ஆம் ஆண்டில் பாவித்துள்ளனர்). மாஸ்கோவில் உள்ள மூன்று வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை செரமெத்தியேவோ, வுனுக்கோவா ஆகும். ![]() 2003ஆம் ஆண்டில் இந்த வானூர்தி நிலையம் அகன்ற உடல் வானூர்திகளை செலுத்த ஏதுவாக விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. ஓடுபாதைகள்,நகர்பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள் இதற்கேற்றவாறு விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இந்நிலையம் ஏர்பஸ் ஏ380 இரக புதிய பெரும் வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. உருசியாவில் இவ்வித வானூர்திகளை இயக்க அனுமதிக்கப்பட்ட முதல் நிலையமாக தமதேதவோ விளங்கியது. தவிர இது பன்னாட்டு குடிமை வான்பயண அமைப்பின்(ICAO) F வகை சீர்தரத்தை அடைந்ததற்கான குறிப்பாகவும் அமைந்தது.[1] விபத்துக்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia