தமிழகத்தில் இடைக்கற்காலம்![]() தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது.[2] குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் பகுதியில் இக்கால ஆயுதங்கள் அதிகம் காணப்படுகின்றன.[1] தேரிதற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.[3] இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.[2] இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.[1] பரவல்இவ்வாயுதங்கள் மேலும் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன.
இந்த ஆயுதங்கள் வடதமிழகத்தில் அதிகம் காணப்படுவதில்லை. ஓடைகளிலும் இடைக்கற்காலப் பரவல்தென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[7] இதை வைத்து இடைக்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம். இன்றுஇன்றும் இக்கால மக்கள் வேடர் (தமிழகம் மற்றும் ஈழம்), இருளர், காடர், காணிக்கார், பழையர், மலைப்பண்டாரம் போன்ற மக்களுள் கலந்து வாழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia