தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறைதமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறை, தமிழ்நாடு அரசு நிதித் துறையின் கீழ் இயங்கும் அரசின் தணிக்கை துறைகளில் ஒன்றாகும். அரசின் பிற தணிக்கைத் துறைகள் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, இந்து சமய அறநிலைய தணிக்கைத் துறை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தணிக்கைத் துறை மற்றும் அரசின் வணிக நிறுவனங்களில் தணிக்கைத் துறை ஆகும். கூட்டுறவுத் தணிக்கைத் துறை தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை இயக்குநர் தலைமையில் இத்துறை செயல்படுகிறது. கூட்டுறவு தணிக்கைத் துறையின் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1983, பிரிவு 80-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் 80-ஆவது பிரிவின் கீழ் பதிவாளரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கூட்டுறவு தணிக்கைப் பதிவாளர் ஆவார். தணிக்கை செய்வதற்கான சட்ட அதிகாரம்தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983, பிரிவு 80-இன் கீழ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (தணிக்கை) எனும் பதவி அரசினால் இயக்குநர் என்ற நிலையில் நியமனம் செய்யப்பட்டு இத்துறை செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (தணிக்கை) தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள் 1988 விதி 101, 102 மற்றும் 103, கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 72, 80 மற்றும் 140 ஆகியவற்றின்படி பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் தவிர்த்து 14 நிர்வாகப் பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தணிக்கையினை மேற்கொள்கிறது.[1] கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலகம்தணிக்கை இயக்குநருக்கு பணியில் உதவிட 1 தணிக்கை இணை இயக்குநர் (தலைமையிடம்), 1 தணிக்கை உதவி இயக்குநர் (நேர்முக உதவியாளர்), 1 தணிக்கை உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளும் மற்றும் 10 கூட்டுறவு தணிக்கை அலுவர்கள், 9 முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் அலுவலகப் பணிக்கு உதவிடுவர். கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலக முகவரிதமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கை இயக்ககம், இரண்டாம் தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், கதவு எண் 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035. மின்னஞ்சல்:addoca.chn@tn.gov.in / தொலைபேசி எண்: 044-24353193 கூட்டுறவு தணிக்கை இயக்குநரின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்மேலும் தணிக்கை இயக்குநரின் கட்டுப்பாட்டில் மண்டலம் மற்றும் சரக அளவில் கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர்களும், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்களும் பணிபுரிகின்றனர்.
தணிக்கை இயக்குநரின் செயல்பாடுகள்
மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் செயல்பாடுகள்
சரக உதவி இயக்குநர் செயல்பாடுகள்
துறை வருவாய் தணிக்கைதுறை வருவாய் தணிக்கையினை மேற்கொள்ள 9 முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் மாநிலம் முழுவதும் மேற்கொள்வார்கள். இவர்களின் முக்கியப் பணி தணிக்கையாளர்களின் நாட்குறிப்பின்படி தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படைவிதிக் கட்டணம் விடுதலின்றி முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல். இதுமட்டுமின்றி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ரொக்கப் புத்தக கணக்குகளை தணிக்கை செய்தல். துறை வருவாய் மற்றும் ரொக்கப் புத்தககணக்கு தணிக்கை குறித்து மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு காலாண்டு தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பித்தல். அவ்வறிக்கையின்படி குறைவாக தணிக்கை கட்டணம் வசூலித்திருந்தாலோ அல்லது அதிகமாக வசூலித்திருந்தாலோ அது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். துறை வருவாய் சோதனை தணிக்கைகூட்டுறவு தணைக்கை இயக்ககம், அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து சரக உதவி இயக்குநர் அலுவலகங்களில் துறை வருவாய் தணிக்கை மீது சோதனை தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் 1 கூட்டுறவு தணிக்கை அலுவலர் பணியிடம் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இவரது முக்கியப்பணி மேற்கூறிய துறைவருவாய் தணிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துறைவருவாய் தணிக்கையினை சோதனை முறையில் சரிபார்த்தல் மற்றும் தணிக்கையாளர்களின் நாட்குறிப்பின்படி தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படைவிதிக் கட்டணம் விடுதலின்றி முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை முறையில் சரிபார்த்தல். இதுமட்டுமின்றி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ரொக்கப் புத்தக கணக்குகளை சோதனை முறையில் தணிக்கைசெய்தல். துறைவருவாய் மற்றும் ரொக்க புத்தக கணக்கு தணிக்கைகுறித்து இயக்குநர் அலுவலகத்திற்கு உரியகாலத்திற்குள் துறைவருவாய் சோதனை தணிக்கை குறைகளை சமர்ப்பித்தல் ஆகும். மேற்கோள்கள்வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia