தமிழ்நாடு அரசு நூலகங்கள்தமிழ்நாடு அரசு பொது நூலகங்கள் ; தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் மைய, கிளை, ஊர்ப்புற , பகுதிநேர மற்றும் நடமாடும் நூலகங்கள் செயல்படுகின்றன.
நோக்கம்தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.
குறிக்கோள்கள்
நூலக வகைகள்தமிழ்நாட்டிலுள்ள பொது நூலகங்கள் அனைத்தும் கீழ்கண்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
நூலகப் பகுதிகள்தமிழ்நாட்டிலுள்ள நூலகங்கள் அனைத்தும் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
வேலை நேரம்தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களும் கீழ்காணும் பட்டியல்படி வேலை நேரங்களைக் கொண்டுள்ளன.
புரவலர்கள்நூலகத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும், பத்து ஆயிரம் செலுத்துபவர்கள் கொடையாளர்களாகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உறுப்பினர்கள்நூலகம் அமைந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் அந்த நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள் அந்தப் பகுதியில் குடியிருப்பதற்கான அத்தாட்சியாக கீழ்காணும் ஏதாவது ஒன்றின் சான்றுக் கையொப்பமிட்ட நகலை உறுப்பினர் படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
உறுப்பினர் கட்டணம்நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் கீழ்கண்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் உறுப்பினராகச் சேருவதற்கான உறுப்பினர் கட்டணம் மற்றும் காப்புத்தொகை விபரம்
மாவட்ட மைய நூலகங்களில் தமிழக அரசால் போட்டித் தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களின் நலனுக்காக போட்டித் தேர்வு மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக சேவைபுரியும் துறையாக உள்ள பொது நூலகத்துறைக்கு முக்கியமாக தேவையானதாக உள்ளது சொந்தக் கட்டடம் ஆகும். ஏனேனில், பொது நூலகத்துறையில் நூலக கட்டட வாடகையாக மட்டும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நூலகக் கட்டமைப்புதமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் 4,603 பொது நூலகங்களில் 1,753 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,516 நூலகங்கள் வாடகையில்லா இலவசக் கட்டடங்களிலும், 320 நூலகங்கள் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருவதோடு, 14 நடமாடும் நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. துறையின் தொலைநோக்கு பார்வையான, “அனைத்து நூலகங்களும் சொந்தக் கட்டடத்தில் செயல்படுத்துதல்” என்ற இலக்குடன், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.135.73 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், ரூ.22.21 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் பராமரிக்கவும் செலவிடப்பட்டுள்ளது நூலக உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை:மக்களின் தேவைகளை அறிந்து, நூலகச் சேவையினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கு, பொது நூலகங்களில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை துரிதப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம் ஆகும். பொது நூலகத் துறையின் தீவிர முயற்சியின் காரணமாக, 2011-12-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 22,75,705 மற்றும் புரவலர்கள் எண்ணிக்கை 57,609 ஆகும். குறிப்பாக, 2016-17-ஆம் ஆண்டில் 2,92,725 உறுப்பினர்களும் 3,821 புரவலர்களும் மற்றும் 34 பெரும் புரவலர்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் மேற்படி, இந்த வாடகையை கட்டுக்குள் கொண்டுவந்தால் மேலும் பல தேவையானவற்றை வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பல நூலகங்களுக்கு புதிய காலிமனைகள் அரசால் பெறப்பட்டும், கட்டடம் கட்ட போதிய நிதியில்லாததால் மேற்படி, காலிமனையும் மூன்றாண்டுகளில் அரசால் மீண்டும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, பொது நூலகத்துறை பொதுமக்களின் நன்கொடைகள் கிடைக்கும் பட்சத்தில் மிகப்பெரிய படித்த சமுதாயத்தை உருவாக்க இயலும். எனவே, பொதுமக்கள் அணைவரும் தனது குழந்தைகளை முதலில் நூலத்தில் உறுப்பினராக்குங்கள், அலைபேசியில் மூழ்கி வரும் சமுதாயம் நமது முன்னோர்கள் சொன்ன அறநெறிக் கருத்துக்களை நூலகத்தில் படித்து வீருகொண்டு எழட்டும். நூலகம் அனைத்தும் சொந்தக் கட்டடதில் செயல்படுவதே சாலச்சிறந்தது. அதற்கு பொதுமக்களே உதவ முன்வர வேண்டும். பொது நூலகத் துறையில் பகுதிநேர நூலகங்கள் திறப்பதற்கான வழிமுறைகள்பொது நூலக இயக்ககம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மக்கள் தொகை கொண்ட நூலகங்கள் இல்லாத கிராமங்களில், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த ஊர் பொது மக்கள் / ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்து பெறப்பட்டு பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன. நிபந்தனைகள் (i) நூலகம் செயல்பட வாடகையில்லா இலவசக் கட்டடம் நூலக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும். (ii) சொந்தக் கட்டடம் கட்ட 5 சென்ட் காலிமனை நூலக ஆணைக்குழுவிற்கு இலவசமாக பத்திரப்பதிவு செய்து பெறப்பட வேண்டும். (iii) தலா ரூ.1,000/- வீதம் நன்கொடையாக செலுத்தி 2 நபர்கள் புரவலர்களாக சேர்க்கப்பட வேண்டும். (iv) நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.20/-ம் ஆண்டு சந்தா ரூ.10/- ஆக மொத்தம் ரூ.30/- செலுத்தி 200 நபர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.(v) சுமார் ரூ.2,000/- மதிப்புள்ள தளவாடங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
மெய்நிகர் நூலகம் அனைத்து மாவட்டங்களிலும் 2 நூலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு குழந்தைகளின் நூலக ஆர்வதினை தூண்டும் விதமாக மெய்நிகர் தொழில் நுட்பக் கருவிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இச்சேவை மூலம் பொது நூலகங்களை மின்னூலகங்களாக மாற்றம் செய்ய முதல் படியாக உள்ளது என்பதில் ஐயமில்லை..
|
Portal di Ensiklopedia Dunia