தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவற்றிற்கு பரிசுகள் மற்றும் விருதுகள் ஆண்டு தோறும் அளிக்கப்படுகின்றன.
பரிசுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.
தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப் பரிசு - சிறந்த நாவல் - ரூ.10000/-
புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு - சிறந்த சிறுகதை நூல் - ரூ. 5000/-
குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல் -ரூ. 5000/-
அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப் பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் - ரூ. 5000/-
தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு - சிறந்த மொழிபெயர்ப்பு நூல் - ரூ. 5000/-
அமரர் செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு - சிறந்த கவிதை நூல் - ரூ. 5000/-
அமரர் சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை என ஏதாவது ஒன்று)- ரூ. 10000/-
விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் விருது மற்றும் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.
தோழர் மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி சார்பாக ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டம் மற்றும் ரூ.10000 பரிசு
தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது - சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படம் - தலா ரூ. 5000/-
2016 சிறந்த நூல்கள்
2016-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன.[1]
பரிசு/விருது
நூல்
நூலாசிரியர்
பதிப்பகம்
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது
முகிலினி
இரா.முருகவேள்
பொன்னுலகம்
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
ஆதிமுகத்தின் காலப் பிரதி
இரா.பூபாளன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது
தாழிடப்பட்ட கதவுகள்
அ.கரீம்
பாரதி புத்தகாலயம்
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர்
பயங்கரவாதியெனப் புனையப்பட்டேன்
அப்பணசாமி
எதிர் வெளியீடு
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது