தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். டிஎம்பி (தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி) ஆனது, 1921இல் தமிழக நாடார் சமூகத்தினரால், நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. 2018-19 நிதி ஆண்டில் ₹2,585 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது இவ்வங்கி.[2] இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது.[3][4] வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 2010 முதல் 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் டி.எம்.பி வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக மதிப்பிடப்பட்டது. அதன் வலுவான வளர்ச்சியின் காரணமாக இது 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த வங்கியாக மதிப்பிடப்பட்டது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற இதன் மொத்த வணிகம் அளவாக ₹616 பில்லியனை எட்டியது.[5] நிதி ஆண்டில், ₹600 பில்லியன் மதிப்பிலான சேவைகளையும், 24 புதிய கிளைகள் திறப்பதையும், ஏடிஎம் எண்ணிக்கையை 1150 ஆக உயர்த்துவதையும் இலக்காக வைத்தது. லோக்மத் பிஎஃப்எஸ்ஐ சிறந்த தனியார் துறை வங்கி 2014-15 விருதை இவ்வங்கி வென்றுள்ளது.[6] வரலாறு![]() தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வரலாறு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.[3] 1920 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் நாடார் வணிக சமூகத்திற்காக ஒரு வங்கியை நிறுவுவதற்கான யோசனை முதலில் முன்மொழியப்பட்டது. 1921 ஆம் ஆண்டில், ஏ.எம்.எம். சின்னமணி நாடார்,[7] மற்றும் அவரோடு சேர்ந்து 27 பேர்களால் முன்னின்று ஆரம்பிக்கப்பட்டது. ஏ. எம். எம் சின்னமணி நாடார், டி. எம். பி-க்கான பிற நிறுவன உறுப்பினர்களை அடையாளம் காணவும் முன்முயற்சி எடுத்தார்.[8] இந்த வங்கி முதலில் 11 மே 1921 இல், நாடார் வங்கி லிமிடெட் என இந்திய நிறுவனங்கள் சட்டம், 1913 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. எம். வி. சண்முகவேல் நாடார், நவம்பர் 4, 1921இல் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி தூத்துக்குடியின், தெற்கு ராஜா தெருவில் உள்ள அனா மாவண்ணா கட்டிடத்தில், டி. வி. பாலகுருசாமி நாடார் இவ்வங்கியை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார்.[7] 1937 ஆம் ஆண்டில், நாடார் வங்கி இலங்கையில் ஒரு கிளையைத் திறந்தது, ஆனால் 1939இல் அதை மூடிவிட்டது.[9] 1947இல், வங்கியில் நான்கு கிளைகள் மட்டுமே இருந்தன: தூத்துக்குடி, மதுரை, சிவகாசி மற்றும் விருதுநகர் .[3] வங்கி தனது முதல் இந்திய கிளையை தமிழக மாநிலத்திற்கு வெளியே 1976 இல் பெங்களூரில் திறந்தது. முதல் முழுமையான கணினிமயமாக்கப்பட்ட கிளை டிசம்பர் 9, 1984 அன்று தூத்துக்குடியின் WGC சாலையில் திறக்கப்பட்டது. வங்கி தனது ஏடிஎம் கார்டை 11 நவம்பர் 2003இல் அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப முயற்சிகள்கிளை அளவிலான செயல்பாடுகளுக்கு கணினிமயமாக்கலை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் தனியார் துறை வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வங்கி நவீனமயமாக்கலை ஏற்றுக்கொண்டது. இன்று இதன் 509 கிளைகளும், இன்ஃபோசிஸ்சின் ஃபினாக்ல் மென்பொருளால் கணினி மயமாக்கப்பட்டு 100% இணைக்கப்பட்டுள்ளது.[10] இணைய வங்கி சேவையில் ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வசதிகளும் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன. இணைய வங்கி சேவைக்காக பில்டெஸ்க், சிசிஅவென்யு(அவென்யூஸ் இந்தியா), எஸ்பிஐ இபே, ஆட்ம் டெக்னாலஜிஸ், பேயூ இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக மொபைல் வங்கி மற்றும் பிஓஎஸ் (பாய்ண்ட் ஆஃப் சேல்) கருவிகளை வழங்கிய வங்கியாகவும் உள்ளது. தலைமை அலுவலகத்தை பல்வேறு துறைகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களுடன் இணைக்க வீடியோ கான்பரன்சிங் வசதியை வங்கி செயல்படுத்தியுள்ளது. இதன் ஏடிஎம் சேவைகளுக்காக நேசனல் பைனான்ஸியல் சுவிட்ச்ல் உறுப்பினராகவும் உள்ளது. வெளிநாட்டு பண பரிவர்த்தனை சேவைகளை விரைந்து வழங்க வெஸ்டர்ன் யூனியன் யூஏஈ எக்ஸ்சேஞ்ச் & பைனான்ஸியல் சர்வீசஸ் மற்றும் பலவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. ஐசிஐசிஐ ப்ரூடன்சியல் முட்சுவல் ஃபண்ட், யூடிஐ முட்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் முட்சுவல் ஃபண்ட், ஃப்ராங்க்லின் டெம்ப்பில்டன் முட்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் முட்சுவல் ஃபண்ட், சுந்தரம் முட்சுவல் ஃபண்ட் மற்றும் எச்டிஎஃப்சி முட்சுவல் ஃபண்ட் போன்றவைகளின் பரஸ்பர நிதிகளை விற்பனை செய்ய இணைந்து செயலாற்றும் ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. டிமாட் வசதிகளை கிடைக்க வங்கி என். எஸ். டி. எல் மூலம் ஒரு வைப்புத்தொகை பங்கேற்பாளராக மாறியது. முதன்முறையாக தென் இந்தியாவில் ஏஎஸ்பிஏ வசதிகளை வழங்கியது இவ்வங்கியாகும்.[11] இது ரிலிகேர் செக்யூரிட்டீஸ் மூலம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தையும் வழங்குகிறது. என். சி. டி. இ. எக்ஸ் மற்றும் எம். சி. எக்ஸ் நிறுவனங்களுக்கான தீர்வு வங்கியாக மாறுவதன் மூலம் டி. எம். பி பொருட்கள் எதிர்கால சந்தையில் நுழைந்தது. வங்கிகளில் முதன்முறையாக இணைய வழி வைப்புநிதி கணக்கு ஆரம்பிக்கும் வசதியை வழங்கியது. டி. எம். பி எங்கிருந்தும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு "உங்கள் கணக்கு எண்ணைத் தேர்வுசெய்க" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் தவறும் அழைப்பு மூலம் கணக்கு இருப்பு தொகை அறியும் வசதி, கிளைகள் மூலம் பிஎஸ்என்எல் பில் கட்டணம் மற்றும் ரூபே டெபிட் கார்டு போன்ற வசதிகளையும் வழங்கியுள்ளது. அந்நிய செலாவணிமார்ச் 2019ம் நிதி ஆண்டில் 15,726 கோடி ரூபாய் அந்நிய செலாவணி வர்த்தகத்தை எட்டியுள்ளது.[5] அந்நிய செலாவணி வருவாயைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் துறை வங்கிகளில் டி. எம். பி முதலிடத்தில் உள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் நோக்கில், வங்கி தனது அந்நிய செலாவணி துறையை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மாற்றியதுடன், அரசு பத்திரங்கள், பத்திரங்கள், பங்குகள், அந்நிய செலாவணி ஆகியவற்றில் வர்த்தகத்தை கையாள போதுமான உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த கருவூலம் மற்றும் அந்நிய செலாவணி செயல்பாட்டுத் துறையை உருவாக்கியது. டி. எம். பி உலகளாவிய இண்டர்பேங்க் நிதி தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஸ்விஃப்ட்) உறுப்பினராக உள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia