தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் சமமான தரமான கட்டணமற்ற தாய்மொழிக் கல்வியை வேண்டியும், தாய்மொழியில் கல்விகற்றோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமையை வேண்டியும், தாய்மொழி வழியிலான கல்வி உரிமைகளை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் இயக்கம் ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளாராகப் பொழிலன் செயற்படுகிறார்.

2015 இல் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்நாட்டு மாவட்ட தலைநகரங்களில் "தமிழே கல்வி மொழி, தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை, தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை" என்ற கோரிகளை வலியுறுத்தி பேரணிகளை இவர்கள் நடத்தி உள்ளார்கள்.[1] இந்தப் பேரணியில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாட்டு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் உட்பட்ட பல்வேறு அமைப்புகள் பங்கெடுத்தன.

மேற்கோள்கள்

  1. "தமிழ்மொழி படித்தோருக்கே வேலை: வலியுறுத்தி பேரணி!". vikatan.com. Retrieved 28 February 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya