தமிழ் பேசு தங்கக் காசுதமிழ் பேச தங்கக் காசு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். தனித்தமிழில் உரையாடுவதே இந்த நிகழ்ச்சி. வெற்றியாளர்கள் தங்கக் காசினைப் பரிசாகப் பெறுவர். இந்த நிகழ்ச்சி மூன்று சுற்றுக்களைக் கொண்டது. முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,
இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இதே விதிமுறைகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலியில் பல ஆண்டுகளாக போட்டி நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற இந்நிகழ்ச்சியை கே. எஸ். ராஜா, பி. எச். அப்துல் ஹமீட் போன்றோர் தயாரித்து வழங்கியிருந்தார்கள். வெளியிணைப்புக்கள் |
Portal di Ensiklopedia Dunia