தயோசிலிக்கேட்டுதயோசிலிக்கேட்டு (Thiosilicate) என்பது வேதியியலிலும் பொருளறிவியலிலும் [SiS2+n]2n− என்ற வாய்பாட்டிலான எதிர்மின் அயனிகளை கொண்ட பொருள்களைக் குறிக்கும். வழிப்பெறுதிகளில் சில சல்பைடுகள் ஆக்சைடுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு உருவாகும் பொருள்களும் தயோசிலிக்கேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆக்சோயெக்சாதயோயிருசிலிக்கேட்டிலிருந்து [Si2OS6]6− பெறப்பட்ட பொருட்களை உதாரணமாகக் கூறலாம். சிலிக்கான் அனைத்து தயோசிலிகேட்டுகளிலும் நான்முகியாகவும் கந்தகம் பாலமாக அல்லது விளிம்பு நிலையிலும் இருக்கும். முறைப்படி இத்தகைய பொருட்கள் சிலிக்கான் டை ஆக்சைடு மற்றும் சிலிக்கேட்டுகளுக்கு இடையே உள்ள உறவுக்கு ஒப்பாக சிலிக்கான் டைசல்பைடிலிருந்து பெறப்படுகின்றன. தயோசிலிகேட்டுகள் பொதுவாக நிறமற்ற திடப்பொருளாகக் காணப்படுகின்றன. இவை நீராற்பகுத்தலுக்கு பண்புரீதியாக உணர்திறன் கொண்டவை. சால்கோசெனிடோடெட்ரிலேட்டுகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தப்படுகின்றன. ![]() பொருளறிவியல்இலிசிகான் எனப்படும் இலித்தியம் சூப்பர் அயனி கடத்திகளில் வேகமான அயனி கடத்திகளான தயோசிலிக்கேட்டுகளும் அடங்கும்.[2] தயோசிலிக்கேட்டுகள் மற்றும் தொடர்புடைய தயோசெருமேனேட்டுகள் அகச்சிவப்பு ஒளியியலுக்கு பொருத்தமானவையாக உள்ளன. ஏனெனில் அவை குறைந்த அதிர்வெண் ஐஆர் முறைகளை மட்டுமே உறிஞ்சுகின்றன.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia