தரில் மிட்செல்
தரில் யோசப் மிட்செல் (Daryl Joseph Mitchell, பிறப்பு: 20 மே 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக பல்துறைகளிலும் விளையாடி வருகிறார். இவர் உள்ளூரில் கேன்டர்பரி துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார்.[1][2] 200 இற்கும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றிய மிட்செல், 2019 இல் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[3][4][5] 2022 பெப்ரவரியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 இந்தியன் பிரீமியர் லீக் சுற்றில் விளையாட இவரை ஏலத்தில் வாங்கியது.[6] பன்னாட்டுப் போட்டிகள்2019 சனவரியில், மிட்செல் நியூசிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட இணைக்கப்பட்டார்.[7] தனது முதலாவது இ20ப போட்டியை இந்தியாவுக்கு எதிராக 2019 பெப்ரவரி 6 அன்று விளையாடினார்.[8] 2019 நவம்பரில்,தேர்வு அணியில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] தனது 1-ஆவது தேர்வுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 2019 நவம்பர் 19 இல் விளையாடினார்.[10] சிறப்புகள்அபுதாபியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான பரபரப்பான அரையிறுதி மோதலின் முக்கியமான தருணத்தின் போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரசீத்தை அவர் வழியில் தடுத்ததை உணர்ந்த பிறகு, ஒரு ஓட்டம் கூட ஓடக்கூடாது என்ற மிட்செல் எடுத்த முடிவுக்காக, 2021 ஐசிசி விருதுகளின் போது ஐசிசி துடுப்பாட்ட உணர்வு விருதை வென்றவராக இவர் பெயரிடப்பட்டார்.[11][12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia