தற்கால அடிமைமுறை

வாக் பிரி அறக்கட்டளையின் ஆய்வில், மக்கள் தொகை அடிப்படையில் நவீன அடிமைமுறை உள்ள நாடுகள்

தற்கால அடிமைமுறை (Contemporary slavery) என்பதை நவீன அடிமைமுறை என்றும் அழைப்பர். ஒரு நபர் பிற ஒரு நபரையோ அல்லது நபர்களையோ தன்னுடைய பயன்பாட்டுக்கான இலாப நோக்கத்துடன் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதோ அல்லது அவர்களின் தனிப்பட்ட உரிமையை கட்டுப்பட்டுத்துவதோ அல்லது பிறரிடம் அவர்களை பரிமாறிக் கொள்வதே நவீன அடிமைமுறை எனப்படும்.

அடிமைமுறைகள்

கொத்தடிமைகள், பலவந்தமாக திருமணம் செய்விக்கப்படுபவர்கள், அடிமைக்குடும்பத்தில் பிறப்பவர்கள், பாலியல் தொழிலில் விற்கப்படுபவர்கள், மாந்தக் கடத்துகை, குழந்தைத் தொழிலாளர்கள், பெண்ணடிமைத்தனம் [1], ஆகியவைகள் நவீன அடிமைமுறையில் அடங்குவார்கள்.[2]

2016-ஆம் ஆண்டின் வாக் பிரி அறக்கட்டளை அறக்கட்டளையின் (Walk Free Foundation[3] ஆய்வறிக்கையின்படி உலகின் 196 நாடுகளில் உள்ள 45.8 மில்லியன் நவீன அடிமைகளில், 58 விழுக்காட்டினர் ஆசிய - பசிபிக் நாடுகளான இந்தியா[4], சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் உள்ளனர். நவீன அடிமைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடப்படும்போது வடகொரியா முதலிடத்திலும் உள்ளது.[5]

நவீன அடிமை முறைக்கான காரணங்கள்

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பொருட்களைச் சந்தைப் படுத்தும் நோக்கத்திற்காக, வளரும் நாடுகள் அதிக அளவில் மற்றும் குறைந்த விலையில் நுகர்வுப் பொருட்களைத் தயாரிக்க, குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை மூலம் தற்கால நவீன அடிமைமுறையை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.[6]

நவீன அடிமைமுறை மிகக் குறைவாக நாடுகள்

உலகில் மிக மிகக் குறைந்த அளவில் நவீன அடிமைமுறை உள்ளதாக கணிக்கப்பட்ட நாடுகளில் லக்சம்பர்க், அயர்லாந்து, நார்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்க நாடு, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் அடங்கும்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya