தள்ளிப் போகாதே (திரைப்படம்)
தள்ளிப் போகாதே ( Thalli Pogathey ) என்பது ஒரு இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். இதை ஆர். கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இது 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நின்னு கோரி படத்தின் மறு ஆக்கமாகும். இந்த படத்தில் அதர்வா, அனுபமா பரமேசுவரன், அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர். அசல் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக செல்வா ஆர். கே , ஒளிப்பதிவாளராக என். சண்முக சுந்தரம் பணியாற்றினர். எம். இராஜ்குமார் கலை இயக்குநராக இருந்தார். அச்சம் யென்பது மடமையடா (2016) படத்தில் இடம் பெற்ற அதே பெயரின் பாடலால் இந்த தலைப்பு ஈர்க்கப்பட்டுள்ளது. [1] படம் 24 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[2] திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ஆனால் எழுத்து, பாத்திர வடிவமைப்பு, உணர்ச்சிமயமான காட்சிகள் ஆகியவற்றிற்கான விமர்சனங்கள்.[3] கதைச் சுருக்கம்கதைக்களம், கார்த்திக் (அதர்வா), பல்லவி (அனுபமா பரமேசுவரன்) , அருண் (அமிதாஷ் பிரதான்) ஆகியோரைச் சுற்றி வருகிறது. கார்த்திக் அவளை விட்டு வெளியேறும் திட்டத்தை நிராகரித்தபோது, பல்லவி அருணுடன் திருமணம் செய்துகொண்டு பிரான்சுக்கு குடிபெயர்கிறாள். பல்லவியை இன்னும் காதலித்து வரும் கார்த்திக், அவளை மீண்டும் கைபிடிக்கும் நம்பிக்கையில் ஒரு வருடம் கழித்து பிரான்சில் இறங்குகிறான். நடிகர்கள்
தயாரிப்புஅதர்வா, அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் வைபவ் இதில் நடிப்பதாக ஊகிக்கப்பட்டது.[7][8] ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டு, அமிதாஷ் பிரதான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[9] வித்யுலேகா ராமன் அசல் படத்தின் அதே வேடத்தை தமிழிலும் நடித்திருந்தார்.[10] இத்திரைப்படம் சென்னை, உருசியா, அஜர்பைஜானில் பக்கூ, சியா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[11][12][13] படத்தில் ஐந்து நிமிட காட்சிக்காக நடிகர்களும் படக்குழுவினரும் சியாவில் ஒரு மலையில் ஏறினர்.[13] இந்தப் படம் பிரான்சின் [[லீல்|லீல் நகரில்\\ படமாக்கப்பட்டுள்ளது.[14] ஒலிப்பதிவுஇப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.[15] அசல் தெலுங்கு பதிப்பின் பாடல்கள் தக்கவைக்கப்பட்டு தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டன.[16] கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். வெளியீடுபடம் 3 திசம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது.[17] படம் 24 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[2] வரவேற்புதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம்.சுகந்த், எழுத்து, பாத்திர வடிவைப்பு , நடிப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை விமர்சித்து 5க்கு 2 மதிப்பெண் கொடுத்தது. ஆனால் தயாரிப்பு அமைப்புகளைப் பாராட்டினா. ஆனால் "இது ஒரு அம்சத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை மட்டுமே தருகிறது. எந்தவொரு உணர்ச்சிகரமான ஈடுபாடும் இல்லாத நீண்ட தொலைக்காட்சி விளம்பரம்." எனவும் எழுதினார்.[18] சிஃபி படத்திற்கு 5க்கு 3 மதிப்பெண் அளித்தது. மேலும் 'தள்ளி போகதே' பார்க்கக்கூடிய தெலுங்கு மறுஆக்கம்!" எனவும் எழுதியது.[19] பிங்க்வில்லா படத்திற்கு 5க்கு 3 மதிப்பெண் கொடுத்தது. இசை, நடிப்பு , ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டி, படம் "இந்த வார இறுதியில் பார்க்கத் தகுந்த தென்றல் போன்ற பொழுதுபோக்கு" என்று கூறியது.[20] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia