தாதா லேக்ராஜ் என்று அழைக்கப்படும் லேக்ராஜ் குப்சந்த் கிர்பலானி (Lekhraj Khubchand Kirpalani), 15 திசம்பர் 1876 - 18 சனவரி 1969) பிரம்மா குமாரிகளை நிறுவிய ஒரு இந்திய ஆன்மீக குரு ஆவார்.[1]
தொடக்க கால வாழ்க்கை
லேக்ராஜ் கூப்சந்த் கிருபலானி 1876 டிசம்பர் 15 ஆம் தேதி ஹைதராபாத் சிந்து மாகாணத்தில், வல்லபாச்சாரியார் கிருபளானி குடும்பத்தில் தாதா லேக்ராஜ் பிறந்தார். இவரது தந்தை ஓர் ஆசிரியராவார்.[2] மேலும் இவர் தரை விரிப்புகளை விற்பனை செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்படியாக வைர வியாபாரத்தில் நுழைந்து, நன்கு அறியப்பட்ட நகைக்கடைக்காரராகவும், இவரது சமூகத்தில் மரியாதைக்குரியவாகவும் விளங்கினார்.[3] தனது ஐம்பதாவது வயதில் மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஐதராபாத்
சென்று ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.[4]
ஆன்மீக வாழ்க்கை
ஓம் மண்டலி
1936 இல், லேக்ராஜ் ஓம் மண்டலி என்ற ஆன்மீக அமைப்பை நிறுவினார்.[5][6]
இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது
என்பதை வலியுறுத்துகின்றது.[8]
↑Religions of the World. A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. J Gordon Melton and Martin Baumann. Facts on File Inc, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-8160-5458-4