தாமு (சமையல் கலைஞர்)கே. தாமோதரன் (K. Damodharan) என்பவர் தொழில் ரீதியாகச் சமையல் கலை நிபுணர் ஆவார். இவர் தாமு என்று அழைக்கப்படுகிறார்.[1] இவர் பல்வேறு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஏராளமான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி சமையல் போட்டிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளியில் நடுவராக இருந்தார். 2010-ல், ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.[2] 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.[3] மேலும், இவர் தமிழ்ப் படங்களில் சில தோற்றங்களில் நடித்துள்ளார். தொழில்திசம்பர் 2010-ல், தாமோதரன் ஒரு நாளில் 190 கிலோ கிராம் உணவைக் கொண்ட 617 உணவு வகைகளைச் சமைத்தார். இவர் திசம்பர் 21 அன்று காலை 8 மணிக்குச் சமைக்கத் தொடங்கி 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகளுக்குச் சமைத்து முடித்தார்.[4][5] தமிழகத்தின் 15 நகரங்களில் நடைபெற்ற தி இந்துவின் நமது மாநிலம் நமது சுவைப் போட்டியில் தாமோதரன் நடுவராகவும் இருந்தார்.[6] திரை தோற்றங்கள்திரைப்படங்கள்
வலைத் தொடர்
தொலைக்காட்சி தொடர்
விருதுமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia