தாம் கர்ரன்
தாமஸ் கெவின் கர்ரன் (Thomas Kevin Curran (பிறப்பு மார்ச் 12, 1995) இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகைல் விளையாடி வருகிறார். வலது கைவிரைவு வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளர் ஆவார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விஇவர் முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் கெவின் கர்ரனின் மகன் ஆவார். இவரது சகோதரர் நார்த்தம்டான்சயர் துடுப்பாட்ட அணி வீரர் பென் கர்ரன் ஆவார். கேப் டவுனில் பிறந்த இவர் சிம்பாப்வேயில் உள்ள ஸ்பிரிங் ஹவுஸ், பிரிபேரட்டரி ஆகிய பள்ளிகளில் பயின்றார். இருபது20இவர் குவாசுலு-நடல் இன்லாந்து அணியில் 15 மற்றும் 17 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றார்.[1] இவரது ஆட்டத்தினைக் கவனித்த இயன் கிரெய்க் இவரை சர்ரே லெவன் அணிக்காக விளையாட அழைத்தார்.[2] 2013 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். எசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் சர்ரே அணி சார்பாக விளையாடினார். மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொண்டார்.[3] 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக இவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.[4] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia