தாயகம் (திரைப்படம்)
தாயகம் திரைப்படம் ஏ. ஆர். இரமேஷ் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்ப் படமாகும். விஜயகாந்த், அருண் பாண்டியன், நெப்போலியன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் 15 ஜனவரி 1996-இல் வெளிவந்தது. வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. [1][2] இத்திரைப்படம் தெலுங்கில் மாத்ருபூமி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3] கதைமரண தண்டனை பெற்ற மூன்று கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து, அப்துல் சலிம் (லஷ்மி ரத்தன்) எனும் விஞ்ஞானி பயணிக்கும் விமானத்தை கடத்துகின்றனர். ஏனெனில் அவர் ஒரு அதிசய கண்டுபிடிப்பான ஒரு மருந்தை தனக்கு சொந்தமாக்கி கொள்ள கடத்துகின்றனர். விமான ஒட்டி (நெப்போலியன்) கடத்தல்காரர்களின் கட்டளைகிணங்க விமானத்தை காஷ்மீர் மலை மீது இறக்குகிறார். அங்கே, ஸ்னொபியர் (மன்சூர் அலிகான்) எனும் தீவிரவாதிகளின் தலைவன் மருந்தை பெறுவதற்காக பயணிகளை கொல்வதாக மிரட்டுகிறான். அவர்களை மீட்பதே மீதி கதை. நடிகர்கள்
விருதுகள்இத்திரைப்படம் வெளியானபோது பின்வரும் விருதுகளை பெற்றது:
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையையும் பாடலுக்கும் தேவா இசையமைத்திருந்தார். 1996-இல் பாடல்கள் வெளியானது, இதிலுள்ள 5 பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருந்தார். [4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia