தாயக இயக்கம்
தாயக இயக்கம் (மலாய்:Gerakan Tanah Air; ஆங்கிலம்:Homeland Movement அல்லது Homeland Party) என்பது மலேசியாவில் மலாய் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி ஆகஸ்டு 2022-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் நிறுவப்பட்டது.[3][4] 2022- ஆம் ஆண்டில், இந்தக் கூட்டணியைத் தொடங்கும் போது, அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலில், தற்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனலுக்கு எதிராகத் தாயக இயக்கம் போட்டியிடும் என்று மகாதீர் பின் முகமது அறிவித்திருந்தார்.[5] 6 செப்டம்பர் 2022 அன்று, இந்தக் கூட்டணியைப் பதிவு செய்ய மலேசிய சங்கங்களின் பதிவாளரிடம் (Registrar of Societies) விண்ணப்பம் செய்யப்பட்டது.[6] 2022 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி எந்த ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.[7] பொது4 ஆகஸ்டு 2022 அன்று, தாயக இயக்கத்தின் தலைவர் மகாதீர் முகமது, தாம் ஒரு கூட்டணியைத் தொடங்குவதாக அறிவித்தார். மலேசியாவில் உள்ள இனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் நாட்டை நிலையான பாதுகாப்புடன் வழிநடத்த இயலும் என்றும்; அதனால் இந்தக் கூட்டணி தொடங்கப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் அறிவித்தார். 23 செப்டம்பர் 2022 அன்று, தாயக இயக்கம், அதிகாரப்பூர்வ அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.[8] 2 நவம்பர் 2022 அன்று, 2022 பொதுத் தேர்தலில் 121 நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது.[9] இருப்பினும், தேர்தல் முடிவில் அனைத்து 121 நாடாளுமன்ற இடங்களில் தோல்வி கண்டது. மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை![]() மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia