தாய்சியுடு

தாய்சியுடு ((சிரில்லிக்: Тайчууд, டைசூட்) என்பது 12ம் நூற்றாண்டு மங்கோலியாவில் கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் முக்கியமான மூன்று பழங்குடியினத்தில் ஒன்று ஆகும். 

மங்கோலியப் பேரரசு கி.பி. 1207, தாய்சியுடு மற்றும் மற்ற இனங்கள்

இவர்கள் சபைக்கால்சுக்கி பிரதேசம் மற்றும் தோர்நோத் மாகாணத்தில் வாழ்ந்தனர்.[1] இவர்களும் கியாத் போர்சிசின்களும் நெருங்கிய இனத்தவர் ஆவர். இவர்கள் போடோன்சார் முன்ஹாக்கின் வழிவந்தவர்கள் ஆவர். இந்த இரு இனங்களிடையே கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்தது. போர்சிசினின் காபூல் கான் 7 மகன்களைப் பெற்றிருந்த போதும் தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த அம்பகையை கமக் மங்கோலின் இரண்டாவது கான் ஆக்கினார். இப்பதவி இரு இனத்தவரிடையே மாறி மாறிச் சென்று கடைசியில் போர்சிசின் வம்சத்தைச் சேர்ந்த செங்கிஸ் கானிடம் வந்தது.

உசாத்துணை

  1. History of Mongolia, Volume II, 2003
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya