தாய்லாந்து மாநிலங்கள் (ஆங்கிலம்: Provinces of Thailand; தாய்: จังหวัดของประเทศไทย); என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் ஆகும். அந்த அமைப்பில் தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்களும் (தாய்: จังหวัด; ஆங்கிலம்: Changwat); புரோவின்சுகள்(Provinces) எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றன.[3]
மற்றும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (ஆங்கிலம்: Bangkok Special Administrative Area; தாய்: เขตปกครองส่วนท้องถิ่นรงถิ่นรูปแบษ), தாய்லாந்து தலைநகர் பாங்காக் (Bangkok) மாநகரைக் குறிக்கும் நிர்வாகப் பகுதியாகும்.[4][5] அனைத்து மாநிலங்களும் தாய்லாந்து நாட்டின் முதன்மையான உள்ளாட்சி அரசுகள்.
பொது
தாய்லாந்து நாட்டின் மாநிலங்கள் (Provinces); முதல் நிலையில் ஆம்போ (Amphoe) எனும் மாவட்டங்களாக (Districts) பிரிக்கப் படுகின்றன. இரண்டாம் நிலையில் தம்போன் (Tambon) எனும் துணை மாவட்டங்களாக (Sub Districts) பிரிக்கப் படுகின்றன. பின்னர் இந்தத் துணை மாவட்டங்கள் உள்ளாட்சி அரசுகளாக இயங்குகின்றன.
ஒவ்வொரு மாநிலமும் ஓர் ஆளுநரால் (ஆங்கிலம்: Phu Wa Ratchakan Changwat; தாய்: ผู้ว่าราชการจังหวัด) நிர்வாகம் செய்யப்படுகிறது. மாநில ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப் படுகிறார்கள்.
தாய்லாந்து இராச்சியம்
தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வப் பெயர் சயாம் ஆகும்.[6] பின்னர் இது தாய்லாந்து என மாற்றம் கண்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டது. மீண்டும் 1949 மே 12-ஆம் தேதி தாய்லாந்து என மாற்றம் கண்டது.
தாய்லாந்து மன்னர் அந்த நாட்டின் அரசுத் தலைவர்; இராணுவப் படைகளின் தலைவர்; பௌத்த மதத்தை உயர்நிலைப் படுத்துபவர்; அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.
↑"Administrative information". Department of Provincial Affairs (DOPA). Provincial Affairs Bureau. 21 April 2017. Archived from the original on 10 ஆகஸ்ட் 2018. Retrieved 22 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)