தாலியம் ஐதரைடு
தாலியம் ஐதரைடு (முறையாக தாலியம் மூவைதரைடு என்று பெயரிடப்பட்டது) என்பது TlH தாலியம் ஐதரைடு என்பது எளிமையான தாலேன் ஆகும். 13 ஆம் தொகுதி உலோகங்களில் தாலியம் மிகக்கனமானதாகும்; 13 ஆம் தொகுதி ஐதரைடுகளின் நிலைத்தன்மையானது தொடர் எண் அதிகரிக்கும் போது குறைகிறது. ஐதரசனின் 1s எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதையுடன் உலோகத்தின் இணைதிறன் எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதைகளின் மோசமான மேற்பொருந்துதல் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆரம்ப அறிக்கைகளை ஊக்குவித்த போதிலும், தாலியம் ஐதரைடு வகை சேர்மங்களை பிரித்தெடுப்பதற்கு வாய்ப்பில்லாமலே இருந்தது. திண்ம வாயுக் கோவை பிரித்தெடுத்தல் ஆய்வுகளில் மட்டுமே தாலியம் ஐதரைடுகள் காணப்படுகின்றன; ஹைட்ரஜன் வாயு முன்னிலையில் தாலியத்தை சீரொளி வெப்பந்தணிப்பு முறையில் வாயு நிலையில் அகச்சிவப்பு நிறமாலை பெறப்பட்டது. [2] இந்த ஆய்வு இஷ்வெர்ட்ஃபெகர் நடத்திய தொடக்கமுதலே இருந்த கணக்கீடுகளின் அம்சங்களை உறுதிப்படுத்தியது, இது தாலியம் மற்றும் இண்டியம் ஐதரைடுகளின் ஒத்த நிலைத்தன்மையைக் குறிக்கிறது. [3] இன்றுவரை ஒரு தாலியம் ஐதரைடு அணைவுச் சேர்மம் ஒன்றின் பிரித்தெடுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை. வரலாறு2004 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியலாளர், லெஸ்டர் ஆண்ட்ரூஸ் முதல் முறையாக தாலியம் ஐதரைடை தொகுப்பு முறையில் தயாரித்தார். இந்த வினை வரிசை தாலியத்தின் அணுக்கருவாக்கம், அதன்பிறகு ஐதரசனுடன் கிரையோஜெனிக் இணை-படிவு என்ற படிநிலைகளில் நகர்ந்து குற்றலை புற ஊதா கதிர்வீச்சுடன் முடிந்தது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia