தாலி புதுசு
தாலி புதுசு (Thaali Pudhusu) 1997 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். கேயார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, சுரேஷ், குஷ்பு சுந்தர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்யாசாகர் மற்றும் ராஜ் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஏப்ரல் 1010, 1997இல் வெளியிடப்பட்டுள்ளது.[1][2] 1994 ல் "ஆமே" எனும் பெயரில் தெலுங்கில் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கதைச்சுருக்கம்அருண் (ராம்கி) வங்கியொன்றில் காசாளராக பணிபுரியும் சீதாவை (குஷ்பு சுந்தர்) ஒரு முகமாக காதலித்து வந்தான். அத்தோடு சீதா செல்லுமிடமெல்லாம் அவளை பின்தொடர்ந்தும் சென்றான். சீதாவோ அவனது காதலை நிராகரித்ததோடு தனது முந்தைய கால வாழ்வு பற்றி அவனிடம் கூறுகிறாள். சில காலங்களுக்கு முன்பு சீதா நடுத்தர குடும்பப் பெண்ணாக காணப்பட்டதுடன். அவர்களுடன் அவளது வேலையற்ற மைத்துனனான (தலைவாசல் விஜய்) அவர்ளுடன் வசித்து வந்தான். பாலு (சுரேஷ்) வங்கி முகாமையாளர். மற்றும் அவன் சீதாவை காதலித்து வந்தான். மணி (மணிவண்ணன்) பாலுவின் தந்தை. ஒரு கருமி. மணி பாலுவிற்கு பெரிய பணக்கார பெண்ணை தேடிவந்தார். ஆனால் பாலு சீதாவை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால் திருமணத்தன்று பாலு ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றான். பாலுவின் மரணத்திற்கு பின் மணி சீதாவை நிராகரிக்கின்றார். பின்னர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட மணி சீதாவிடம் கெஞ்சி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு சீதாவின் கணவன் பார்த்த வேலை சீதாவிற்கு கிடைக்கிறது. சீதாவின் மைத்துனனோ அவனது மனைவியின் தாலியை கழட்டி சீதாவிற்கு கட்ட சீதா உடனே அதை கழட்டி எறிந்து விடுகிறாள். சீதாவின் கடந்த கால வாழ்வை கேள்விப்பட்டதும் அருண் அவளை ஆழமாக காதலிக்கிறான். நீதிமன்றமும் சீதாவின் மைத்துனனிற்கும் சீதாவிற்கும் இடையிலான திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்குகிறது. இறுதியில் சீதாவை அருண் திருமணம் செய்கிறான். நடிகர்கள்
இசைவித்யாசாகர் மற்றும் ராஜ் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களின் வரிகளை வாசன் எழுதியுள்ளார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia