திக்குவல்லை ஸப்வான்
திக்குவல்லை ஸப்வான் (Dickwella Safwan) எழுத்தாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், வானொலி நாடக எழுத்தாளர், மேடைநாடக நடிகர், வானொலி நாடக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றுபவர். முழு இலங்கைக்குமான சமாதான நீதிவான். வாழ்க்கைக் குறிப்புஇலங்கை திக்குவல்லையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திக்குவல்லை எம்.எம். ஸப்வான். இவர் ஏ.ஆர். முகம்மது, எம்.எச். பலீலத்தும்மா தம்பதியினரின் புதல்வர். இவர், இனிகலை முஸ்லிம் வித்தியாலயம், அம்பாந்தோட்டை சாகிராக் கல்லூரி, திக்குவல்லை மின்ஹாத் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர். தொழில்ரீதியில் கிராம உத்தியோகத்தர். ஈழத்துத் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவர் தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களாக எழுதிவருபவர். இவரது அதிகமான குறுங்கதைகள் ரோணியோ - கல்லச்சுப் பதிப்பாக வெளிவந்துள்ளன. 1978 ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை வானொலியில் ஒலிபரப்பானது. அதன் பின்னர் இவரது நூற்றுக்குமதிகமான ஆக்கங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. எழுதிய சில நூல்கள்
வெளிவரவுள்ள நூல்
விருதுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia