திடுக்கம் (இயற்பியல்)இயற்பியலில் நேரத்துடனான ஆர்முடுகல் மாற்ற வீதம் திடுக்கம் (Jerk) எனப்படும். இது ஆர்முடுகலின் நேரம் குறித்த வகைக்கெழு அல்லது திசைவேகத்தின் இரண்டாவது வகைக்கெழு அல்லது நிலைத்திசையனின் மூன்றாவது வகைக்கெழு ஆகும். திடுக்கம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:[1][2][3] இங்கு
திடுக்கம் ஓர் திசையனாகும், இதன் எண்ணளவு மதிப்பினை விளக்க எந்தவொரு பொதுச்சொல்லும் இல்லை (எ.கா,திசைவேகத்துடன் தொடர்புடைய எண்ணிக்கணியம் வேகம்). திடுக்கத்தின் SI அலகு செக்கன் கனத்திற்கான மீட்டர்கள் (மீ/செ3 அல்லது மீ·செ−3) என்பதாகும். திடுக்கத்திற்கு உலகளவில் நியமமாக பாவிக்கப்படும் குறியீடுகள் ஏதும் இல்லை எனினும் பொதுவாக j பாவிக்கப்படுகிறது. ȧ எனப்படும் ஆர்முடுகலின் வகையீட்டிற்கான நியூட்டனின் குறிப்பீடும் பாவிக்கப்படலாம். ஓர் உடல் மீதான ஆர்முடுகலானது அவ்வுடலினை அதே ஆர்முடுகலுடன் இயக்க வழங்கப்படும் விசையாக உணரப்படும், திடுக்கமானது இவ்விசையில் ஏற்படும் மாற்றமாக உணரப்படும். உதாரணமாக ஓர் பயணி ஊர்தியை பூச்சிய திடுக்கத்துடன் ஆர்முடுக்கும் போது உடலின் மீது மாறா விசை உணரப்படும்; நேர்மறை திடுக்கத்தின் போது அதிகரிக்கும் விசையும் எதிர்மறை திடுக்கத்தின் போது குறைவடையும் விசையும் உணரப்படும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia