திண்ம இயற்பியல்திண்ம இயக்கவியல் என்பது இயற்பியலின், இயக்கவியலின் மற்றும் கணிதத்தின் ஒரு துறையாகும், இது வெளி வினைகளுக்கு (எ-டு; வெளி விசைகள், வெப்ப மாற்றங்கள், இடப்பெயர்ச்சி போன்றவை) திண்மப் பொருட்களின் விளைவுகளை பற்றியது. இது தொடரக இயக்கவியல் என்னும் விரிவான இயலின் ஒரு பகுதியாகும். திண்ம இயக்கவியலின் சாமானிய நடைமுறை பயன்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒயிலர்-பெர்னாலியின் உத்திர சமன்பாடு (beam equation) ஆகும். திண்ம இயக்கவியல் அழுத்தங்கள், (அழுத்தத்தால் உண்டாகும்) திரிபுகள், மற்றும் அவற்றிர்கிடையேயான உறவுகள் ஆகியவற்றை வரையருக்க இழுவங்களைப் (tensors) மிகவதிகமாய் பயன்படுத்துகிறது. பதில்விளைவு மாதிரிகள்இடப்பட்ட ஒரு அழுத்ததிற்கு ஒரு திண்மப்பொருள் எவ்வாறு பதில்விளைவு காட்டுகிறது என்பதனை விவரிக்க மூன்று மாதிரிகள் உள்ளன: பருப்பொருட்களுக்கு ஒரு இயல்பு வடிவம் உண்டு, இந்த இயல்பு வடிவம் அழுத்தத்தை இடுவதால் மாறிவிடும். இயல்பு வடிவத்திலிருந்து எந்தளவு வடிவம் மாறுகிறது என்பதே உருத்திரிவு என்று அழைக்கப்படும், இயல்புவடிவிற்கும் உருத்திரிவிற்கும் இடையிலான விகிதசமமே திரிபு (strain) எனப்படும். இடப்பட்ட அழுத்தம் போதுமான அளவு குறைவாக இருக்கையில் (அல்லது உண்டாகும் திரிபு சிறியதாய் இருக்கையில்), கிட்டத்தட்ட எல்லா பருப்பொருட்களுமே தங்களின் திரிபு, அழுத்தத்திற்கு நேர்விகிதசமமாய் இருக்கும் வகையில்தான் நடந்து கொள்ளும், இந்த விகிதசமத்தின் கெழு மீட்சியியல் குணகம் அல்லது யங் குணகம் என்று அழைக்கப்படும். இந்த உருத்திரிவு எல்லையே நேரியல்பு மீட்சி பகுதி என்றழைக்கப்படும். திண்ம இயக்கவியல் பகுப்பாய்நர்கள், கணக்கிடுதலின் எளிமை காரணமாய், நேரியல்பு பருப்பொருள் மாதிரிகளைப் பயன்படுத்துவதே வழக்கு. ஆனால், இயற்கையில் பொருட்கள் நேரியல்பல்லாத நடத்தையினையும் காட்டுகின்றன. புதியவைகளின் பயன்பாட்டினாலும், பழைய பொருட்கள் அவைகளின் பயன்பாட்டு எல்லை தாண்டி பயன்படுத்தப்படுவதாலும் நேரியல்பல்லா பருப்பொருள் மாதிரிகள் அதிக பயன்பாடு பெற்றுவருகின்றன.
|
Portal di Ensiklopedia Dunia