திண் ஊர்தி தொழிற்சாலை

ஆவடியிலுள்ள நடுவண் ஊர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(CVRDE) சோதனை தடத்தில் அருச்சுன் முதன்மை போர்க்கள பீரங்கிவண்டி ஒன்றின் சோதனையோட்டம்
ஆவடியிலுள்ள திண் ஊர்தி தொழிற்சாலையின் வாயில்

திண் ஊர்தி தொழிற்சாலை (The Heavy Vehicles Factory, HVF), ஆவடி, இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந்திய அரசு படைத்துறைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தினபடி 1965ஆம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை நிறுவியது. இங்கு விஜயந்தா, T-90 மற்றும் T-72 இரக பீரங்கி கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட அருச்சுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த தொழிற்சாலை வளாகத்தில் பீரங்கி வண்டிகளின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை ஆராயும் "நடுவண் ஊர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு" (CVRDE) அமைந்துள்ளது.

வெளியிணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya