தித்திகாக்கா ஏரி
தித்திகாக்கா ஏரி (ஆங்கிலம்:Titicaca,ஸ்பானிய மொழி:Lago Titicaca) அந்தீசு மலைத்தொடர் பகுதியில் பொலிவியா மற்றும் பெருவின் எல்லையில் அமைந்த ஏரி ஆகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,812 மீ(12,507 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இவ்வேரி உலகில் மிக உயரமான கப்பல் செல்லத்தக்க ஏரி. நீர் அளவின் படி தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஏரி இதுவாகும்.[1][2] 27 ஆறுகள் இவ்வேரியில் பாய்ந்து தெசாகுவாடேரோ ஆறு வழியாக இவ்வேரியிலிருந்து நீர் செல்கிறது. அமைவு![]() அந்தீசு மலைத்தொடரின் என்டோர்கிக் அல்டிபிலனோ( endorheic Altiplano) பகுதியின் வடமுனைவு பிரதேசத்தில் பெரு மற்றும் பொலீவியா எல்லைகளுக்கு இடையில் இவ்வேரி அமைந்துள்ளது.ஏரியின் மேற்குப்பகுதி பெருவின் புனு பகுதியில் அமையப்பெற்றுள்ளதுடன்,கிழக்குப் பகுதிய பொலீவியாவின் லா பாஸ் துறையில் அமைந்துள்ளது.இரு வேறுபட்ட துணை ஆற்றுப்பள்ளத்தாக்குகளினால் ஏரி உருவாக்கப்பட்டுள்ளதுடன்,அவை திகுய்னா நீரிணையினால் இணைக்கப்பட்டுள்ளது.இந்நீரிணையின் இரு குறுகிய முனைகளுக்கு இடையிலான நீளம் 800மீற்றர்(2,620அடி)ஆகும்.பெரிய துணை ஆற்றுப்பள்ளத்தாக்கான லகோ கிரேன்ட்(லகோ சுகுய்டோ எனவும் அழைக்கப்படுகிறது)135மீற்றர்(443 அடி)சராசரி ஆழத்தையும்,284மீற்றர்(932அடி)ஆகக்கூடிய ஆழத்தையும் கொண்டது.மிகச்சிறிய ஆற்றுப் பள்ளத்தாக்கான வினேய்மர்க்கா(லகோ பேகுவ்எனோ எனவும் அழைக்கப்படுகிறது, "சிறிய ஏரி")9மீற்றர் (30 அடி) சராசரி ஆழத்தையும்,40மீற்றர்(131அடி)ஆகக்கூடிய ஆழத்தையும் கொண்டது.[3] ஏரியின் ஒட்டுமொதடத சராசரி ஆழம் 107மீற்றர்(351 அடி)ஆகும்.[4] பெரிய ஐந்து ஆறுகள் தித்திகாக்கா ஏரிக்கு நீரை வழங்குகின்றன.[5] நீரை வழங்கும் அளவின் படி இவை முறையே ராமிஸ்,கொஒடா,ல்லேவ்,ஹூவன்கேன் மற்றும் ஸச்சிஸ் ஆகும்.21ற்கும் மேலான வெற்று வாய்க்கால்கள் தித்திகாக்காவை உள்நோக்கி காணப்படுகின்றது.தித்திக்கா 41தீவுகைள கொண்டுள்ளதுடன்,அவற்றில் சில தீவுகள் அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் தித்திகாக்காவின் நீர்மட்டங்கள் குறைவைடத்துள்ளன.2009இல் ஏப்ரல்,நவம்பர் இடையில் மாத்திரம் 81சென்றிமீற்றரால் (32அங்குலம்) இதன் நீர்மட்டம் குறைவடைந்தது.இது 1949இல் மிகக்குறைந்த நீர்மட்டத்தை அடைந்தது.தித்திகாக்காவை சுற்றி காணப்படும் நகரங்களின் வளர்ச்சியினால் ஏரியின் நீர்மாசடைதல் அதிகரித்துவருகின்றது.[6] வெப்பநிலைஏரியின் மீதான குளிர்மூலங்களும்,காற்றும் 10 முதல் 14செல்சியஸ் சராசரியான மேற்பரப்பு வெப்பநிலையை வழங்குகின்றது.இது குளிர்காலத்தில்(சூன்-செப்டம்பர்) 10 முதல் 11 செல்சியஸ் இடைடயில் காணப்படுகின்றது.[7] பெயர்தித்திகாக்கா என்ற பெயரின் தோற்றம் அறியப்படவில்லை.இது 'பூமா மலை'என மொழி பெயர்க்கப்படுகின்றது.உள்ளூர் சமூகங்கள் ஏரியின் வடிவத்தை மரபுவழியாக பூமா என்ற வேட்டையாடப்படும் முயலின் பெயரிலிருந்து பெற்றுள்ளனர்.தித்திகாக்கா என்ற இணைந்த சொற்கள் குவச்சுவா மற்றும் அய்மரா போன்ற மொழிகளிலிருந்து பெறப்பட்டுள்ளது. சூழலியல்தித்திகாக்கா ஏரி அதிகளவிலான நீர்ப்பறவைகளை கொண்டுள்ளதுடன், 26 ஆகஸ்ட் 1998 இல் இது ராம்சார் தளமாக பிரகடணப்படுத்தப்பட்டது.தித்திக்கா நீர் தவளை மற்றும் தித்திக்கா நீர் மூழ்கும் பறவை போன்ற அச்சுறுத்தலான விலங்கினங்கள் ஏரிக்குள் தடைசெய்யப்பட்டுள்ளன.தித்திகாக்காவில் உள்ள ஏறத்தாள 90சதவீதமான நீர்வாழ் இனங்கள் அகணிய உயிரி ஆகும்.[8] காலநிலைதித்திகாக்கா, வருடத்தில் பெரும்பாலும் குளிர்குளிர்ந்த, ஒரு ஆல்பைன் காலநிலையைக் கொண்டது.இங்கு வரு்டாந்த சராசரி மழைவீழ்ச்சி 610 mm ஆகும்.குளிர்காலத்தில்,உலர்ந்த மிகக்குளிர்ச்சியான காலையும் இரவும்,வெதுவெதுப்பான மாலையுமாக காணப்படும்.ஏரியின் வடபகுதி நகரான ஜுலிகாவின் சராசரி வெப்பநிலைகள் கீழே தரப்பட்டுள்ளன.
தீவுகள்உருஸ்![]() தித்திகாக்காவானது உருஸில் வாழும் மக்களின் சனத்தொகைக்கு குறிப்பிடத்தக்கது.ஒரு 44 குழு அல்லது மிதக்கும் நாணல்களை கொண்டு செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தீவுகள் பெருவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறிவருகின்றது.அவர்களின் உண்மையான நோக்கம் தற்காப்பாவதுடன்,ஏதாவது அச்சுறுத்தல் எழுந்தாலும் அவர்களுக்கு நகர்த்த முடியும். அமன்தானி![]() குவச்சுவா மொழி பேசும் மக்களைக்கொண்ட, தித்திகாக்கா இன்னுமொரு சிறு தீவு அமன்தானி ஆகும். 15 சதுர கிலோமீற்றர்(6 சதுரமைல்)நிலப்பரப்புடைய,அநேகமாக வட்டவடிவுடைய இத்தீவில்,ஏறத்தாள 4000 மக்கள் பத்து சமூகங்களாக வாழ்கின்றனர்.அங்கு இரண்டு மலைச்சிகரங்கள் காணப்படுகி்னறன.அவை, பச்சாடாடா(தந்தை பூமி) மற்றும் பச்சாமாமா(தாய் பூமி) என அழைக்கப்படுகின்றது.ஆதிகால சிதைவுகள் இரு உச்சிகளிலும் காணப்படுகின்றன.மலைப்பகுதிகள் ஏரியிலிருந்து படிமுறையாக அதிகரித்துச் செல்கின்றது.அங்கு கோதுமை,கிழங்கு மற்றும் மரக்கறிகள் என்பன பயிரிடப்பட்டுள்ளது.பெரும்பாலும் சிறிய நிலங்கள் கையால் வேலை செய்யப்படுகின்றது.பெரிய கல்வேலிகளால் நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.மாடு, செம்மறி ஆடு மேய்தரைகள் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. தீவில் கார்கள் மற்றும் ஹோட்டல்கள் காணப்படுவதில்லை.மேலும்,இயந்திரங்கள் தீவில் பாவிப்பதற்கு அனுமதி இல்லை.எல்லா விவாசய நடவடிக்கைகளும் கையால் செய்யப்படுகின்றன.சில சிறியளவிலான கடைகள் அடிப்படை பொருட்களை விற்பனை செய்கின்றதுடன்,ஒரு மருத்துவமைனயும் ஆறு பாடசாலைகளும் காணப்படுகி்ன்றன.ஒரு ஜனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன், வரையறுக்கப்பட்ட அளவில் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் விநியோகிக்கப்படுகி்ன்றது.பெற்றோலின் விலையேற்றம் காரணமாக தொடர்ந்து ஜனரேட்டர் பயன்படுத்தப்படுவதில்லை.அதிகமான குடும்பங்கள் மெழுகுவர்த்திகள் அல்லது பற்றரி மற்றும் கைகிரான்ஸ் போன்றவற்றால் ஒளிரூட்டப்படும் மின்விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.சிறியளவிலான சூரிய பேனல்கள் அண்மையில் சில வீ்டுகளில் பொருத்தப்பட்டுள்ளன. அமன்தானியில் சில குடும்பங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் தங்குவதற்காக தமது வீடுகளை திறந்துள்ளதுடன், அவர்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பதுடன்,பிரயாண வழிகாட்டிகளையும் ஒழுங்குசெய்து கொடுக்கின்றனர். தகுய்ல்![]() தகுய்ல், புனோவின் கிழக்குப்பகுதயிலிருந்து 45கிலோமீற்றரில் அமைந்துள்ள மலைத்தீவாகும்.இது குறுகிய,நீளமான தீவாகும்.20ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய காலயித்துவத்தின் ஒரு சிறையாக இத்தீவு பயன்படுத்தப்பட்டது.1970இல் தகுய்ல் மக்களின் சொத்தாக இது மாறியது.இத்தீவு 5.72 km² பரப்பளவு உடையது.கடல் மட்டத்திலிருந்து தீவின் உயர்ந்த பகுதி 4,050 மீற்றர்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia