தினேப்பர் ஆறு
தினேப்பர் (Dnieper, உருசியம்: Днепр, உக்ரைனியன்: Дніпро, Belarusian: Дняпро) ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும். இது உருசியாவின் வல்தாய் குன்றுகளில் உற்பத்தியாகி பெலருஸ், உக்ரைன் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. உக்ரைன், பெலரசு ஆகிய இரு நாடுகளின் மிகப்பெரிய ஆறு இதுவே. ஐரோப்பாவின் நான்காவது பெரிய ஆறு. இதன் நீளம் 2,145 இல் இருந்து 2,201 கி.மீ. வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[1] இதன் வடிநிலப் பரப்பு 504,000 சதுரகி.மீ. ஆகும். இவ்வாற்றின் குறுக்கே பல அணைகளும் நீர்மின் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. புவியியல்இவ்வாறு உருசியாவில் 485 கி.மீ.-உம் பெலரசுவில் 700 கி.மீ.-உம் உக்ரைனில் 1,095 கி.மீ.-உம் பயணிக்கிறது. 504,000 சதுர கி.மீ. வடிநிலத்தில் 289,000 சதுர கி.மீ. உக்ரைனிலும்,[2] 118,360 சதுர கி.மீ. பெலரசியாவில் உள்ளது.[3] இது உக்ரைனை கிழக்கு மேற்கு என இரு பாகமாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு உருசியாவின் வட மேற்கிலுள்ள உயர் நிலத்தில் உள்ள வால்டய் மலைகள் என்ற இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது [2] அங்கு இது சிறிய ஆறாகவே உள்ளது. 115 கி.மீ. தொலைவுக்கு இது பெலரசுக்கும் உக்ரைனுக்கும் எல்லையாக உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia