தின்குழியம்![]() தின்குழியம் (Phagocyte) என்பது தின்குழியமை என்னும் உயிரியல் செயல்முறை மூலம் திண்மக் கழிவுப் பொருட்களை, கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை, அல்லது வேறு வெளிப் பதார்த்தங்களை தனது கலமென்சவ்வினால் மூடி உள்ளிழுக்கும் அல்லது விழுங்கும் உயிரணுக்களாகும். பொதுவாக குருதியில் காணப்படும் வெண்குருதியணுக்களில் சில இவ்வகையான தின்குழிய வகைகளாகும். நடுவமைநாடிகள், ஒற்றைக் குழியங்கள், பெருவிழுங்கிகள், கிளையி உயிரணுக்கள், மற்றும் Mast cell என்பன தின்குழியங்களாகும். தின்குழியங்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுவதனால், தொற்றுநோய்களுக்கு எதிரான உடலியல் தொழிற்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றன]].[1]. விலங்கு இராச்சியத்தில் அனைத்து உயிரினங்களிலும் இந்த தின்குழியங்களின் தொழிற்பாடு இருப்பினும்[2], முதுகெலும்பிகளிலேயே மிகவும் விருத்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது[3]. மனிதர்களில் ஒரு லீட்டர் குருதியில் கிட்டத்தட்ட 6 பில்லியன் தின்குழியங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது[4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia