திபு கணவாய்
திபு கணவாய் (Diphu Pass) என்பது இந்தியா, சீனா மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையில் மூன்று நாடுகளின் எல்லைகளும் சங்கமிக்கும் பிரச்சினைக்கு உட்பட்ட புள்ளியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். திபு கணவாய் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. [1]. இக்கணவாய் மெக்மோகன் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது[2]. அக்டோபர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்த்தில் சீனா மற்றும் பர்மா நாட்டினர் திபு கணவாய்க்கான அவர்களின் எல்லையை வரையறுத்துக் கொண்டனர். இந்த எல்லை மலைத்தொடரின் நீர்பிடிப்பு பகுதிக்கு தெற்கே 5 மைல்கள் தள்ளி உள்ளது. இது இந்தியாவின் தூதரகம் சார்ந்த பிரச்சனையாக அமைந்தது, ஏனென்றால் இந்தியா, மும்முனை எல்லை நிர்பிடிப்பு பகுதியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது[3]. இப்பிரச்சனை, அருணாசலப் பிரதேசம் சார்ந்த இந்தியா மற்றும் சீனா எல்லை கருத்துவேறுபாட்டில் ஓர் அங்கமாக இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia