திமோர்
திமோர் (Timor) என்பது திமோர் கடலின் வடக்கில் மலாய் தீவுக்கூட்டத்தின் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1] இத்தீவு கிழக்கு திமோர் என்ற தனிநாட்டையும் இந்தோனீசியாவைச் சேர்ந்த மேற்கு திமோரையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புவியியல்திமோர் தீவின் தெற்கு, மற்றும் தென்கிழக்கே ஓசியானியாவும், வடமேற்கே சுலாவெசி தீவும் மேற்கே சும்பா தீவும் அமைந்துள்ளன. திமோரின் மேல்-வடமேற்கே புளோரஸ் தீவுகள், அலோர் தீவு ஆகியனவும், வடகிழக்கே பாரத் தாயா தீவுகளும் உள்ளன. மொழி, இனம், சமயம்பெரும்பாலான திமோரியர்கள் மெலனேசியர்கள் ஆவார்[2]. மொத்தம் 11 இனக்குழுக்கள் இங்குள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் மேற்கு திமோரில் வசிக்கும் அட்டோனி, மற்றும் நடு, கிழக்கு திமோரில் வசிக்கும் டேட்டம் இனத்தவர்கள் ஆவர்[3]. பெரும்பாலும் திமோரின் பழங்குடியினரின் மொழிகள் இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களில் பேசப்படும் ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவற்றைச் சாராத மொழிகள் மலுக்கு தீவுகளிலும் மேற்கு நியூ கினியிலும் பேசப்படுகிறது[3]. கிழக்கு திமோரில் டேட்டம், மற்றும் போர்த்துக்கீச மொழியும், மேற்கு திமோரில் இந்தோனீசிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். ஆனாலும் கிழக்கு திமோரில் இந்தோனீசிய மொழி பரவலாகப் பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றாகும். இத்தீவின் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் கிழக்கு திமோரில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர்கள் ஆவார். மேற்கு திமோரில் புரட்டஸ்தாந்து பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏனையோர் முஸ்லிம்கள் ஆவார். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia