திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயில்
திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம்இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திம்மராஜம்பேட்டை என்னுமிடத்தில் உள்ளது.[1] இறைவன், இறைவிஇக்கோயிலின் மூலவராக ராமலிங்கேசுவரர் உள்ளார். இறைவி பர்வத வர்த்தினி ஆவார். இக்கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி விழுவதைக் காணலாம். இக்கோயிலை வட ராமேசுவரம் என்றும் அழைக்கின்றனர்.[1] அமைப்புமூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், நந்தி காணப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு வெளியே காணப்படுகின்ற கோயில்களில் கொடி மரத்துடன் உள்ள கோயிலாகும். நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன. நவக்கிரக சன்னதி கோயிலில் உள்ளது.மூலவர் சன்னதியின் வலப்புறத்தில் உற்சவர் உள்ளார். இடப்புறத்தில் ஐயப்பன் உள்ளார். அருகே வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் காணப்படுகிறார். வேறு எங்கும் இல்லாத வகையில் முருகன் சன்னதிக்கு தனி திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போஜராஜன் கோயிலைக் கட்டினார். வரி செலுத்துவதற்காக குத்தகைக்கு திம்மராஜ மன்னனிடம் விட்டார்.இப்பகுதியைச் சுற்றி திம்மம்பேட்டை, நாயக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகனாம்பேட்டை, ஐயம்பேட்டை ஆகிய 18 பேட்டைகள் காணப்படுகின்றன. இவற்றிற்குத் தலைநகராக திம்மராஜம்பேட்டை விளங்கியுள்ளது.[1] திருவிழாக்கள்மாசி மகம், கந்த சஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia