தியாகி திலீபன் மருத்துவ சேவை

தியாகி திலீபன் மருத்துவ சேவை என்பது இலங்கை உள்நாட்டுப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் உள்ள மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய உருவாக்கிய ஓர் அமைப்பாகும். இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிங்கள அரசின் மருந்துத் தடையாலும், மருத்துவமனைகளை அழித்ததாலும் நோயாலும் காயங்களாலும் உரிய சிகிச்சை இன்மையாலும் அவதிப்பட்ட மக்களுக்குப் போராளி மருத்துவர்களைக் கொண்டு, கிடைக்கும் அடிப்படை உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக் கொண்டு மக்களைக் காப்பதற்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.[1]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32,33
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya