தியேகோ கார்சியா
தியேகோ கார்சியா (Diego Garcia) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஒரு பகுதியும், இம்மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளில் ஒன்றும் ஆகும். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளை உரிமை கோரியது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் இவற்றைப் பிரித்தானிய தனது பிராந்தியமாக இணைத்துக் கொண்டது. இத்தீவுகளில் தியேகோ கார்சியா மிகப் பெரியதும், குடிமக்கள் அற்ற ஒரேயொரு தீவுமாகும். தியேகோ கார்சியா தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கி.மீ. (2,197 மைல்) தூரத்திலும், இந்தியாவின் தென்முனையில் (கன்னியாகுமரியில்) இருந்து தென்-தென்மேற்கே 1,796 கி.மீ. (1,116 மைல்) தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து 4,723 கி.மீ. (2,935 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. தியேகோ கார்சியா சாகோசு தீவுக் கூட்டத்தில் சார்கோசு-இலட்சத்தீவு குன்றின் தென்கோடியில் உள்ளது. உள்ளூர் நேரம் ஆண்டு முழுவதும் ஒசநே+06:00]] ஆகும்.[2] தியேகோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தனது தேவைக்கான உதவித் தளத்தை இங்கு வைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் அகியவை இங்கு பேணப்படுகின்றன.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia