திரான்சாக்சியானா![]() திரான்சாக்சியானா (Transoxiana) அல்லது திரான்சாக்சானியா (Transoxania), அரபி: ما وراء النهر (மாவரான்னகர், Mā warāʼ an-Nahr), Persian: فرارود, பராவுத் (Farārūd) என்பது நடு ஆசியாவின் ஒரு பகுதியான (இன்றைய) உசுபெக்கிசுத்தான், தஜிகிஸ்தான், தெற்கு கிர்கிசுத்தான், தென்மேற்கு கசக்கஸ்தான் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கும் பண்டைய பெயராகும். புவியியல்படி, இப்பிராந்தியம் ஆமூ தாரியா, சிர் தாரியா ஆகிய ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.[1] உரோமர்கள் இதனை திரான்சாக்சானியா (ஆமூ தாரியாவிற்கு அப்பாலுள்ள நிலம்) எனவும், அராபியர்கள் மாவரான்னகர் (ஆற்றிற்கு அப்பாலுள்ள நிலம்), ஈரானியர் துரான் எனவும் அழைத்தனர்.[2] இப்பகுதி பாரசீகத்தின் அகாமனிசிய வம்சத்தின் சோக்தியானா என அழைக்கப்பட்ட மாகாண ஆட்சியின் ஒன்றாக இருந்தது. ஆரம்பகால அராபிய புவியியலாளர்கள் இதனை "பிலாத் அல்-துர்க் (Bilād al-Turk") அல்லது "துருக்கிஸ்தான்" (Turkestan, துருக்கியரின் நிலங்கள்) என அழைத்தனர்.[3] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia