திரிகர்த்ததேசம்
![]() திரிகர்த்ததேசம் கேகயதேசத்திற்கு தென்மேற்கிலும், மாத்ரதேசத்திற்கு தெற்கிலும்,சதத்நதியின் அருகிலும் பரவி இருந்த தேசம்.[1] இருப்பிடம்இந்த திரிகர்த்ததேசத்தின், மேற்குபாகம் முழுமையும் சதத்ருநதியின் வெள்ளப் பெருக்கினால் மிகுந்த செழுமையாக இருக்கும். இந்த தேசத்தின் மூன்று பாக பூமி கரடுமுரடாகவும், மேடு பள்ளங்களையும், சுண்ணாம்புக் கற்பாறைகளால் சூழப்பட்டதாயும் இருக்கும்.[2] பருவ நிலைஇந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். கேகயம், பாஹ்லிகம், மாத்ரம், காந்தாரம் முதலான தேசங்களில் நல்ல வெயில் தோன்றும் ஆனால் வெய்யிலை ஒருவரும் காணமுடியாது. மலை, காடு, மிருகங்கள்இந்த தேசத்தின் வடக்கிலும், கிழக்கிலும் ஓடும் முக்கிய நதிகளின் கரைகளில் சிறு, சிறு மலைகளும், ஒரு பெரிய குன்றுகளுக்கும் ஹரிகிரி என்றும் விஷ்ணுகிரி ஆகியவற்றைச்சுற்றி சிறிய காடுகளும், அவைகளில் சில சிறு மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் சிறு, சிறு மலைகள் உள்ளது. நதிகள்இந்த தேசத்தின் வடமேற்கு பாகத்தில் ஐராவதி நதியும், கிழக்குப் பாகத்தில் சதத்ருநதியும் இணைந்து திரிகர்த்ததேசத்தின் வடமேற்கு திசையில் ஓடி, சிந்து நதியுடன் இணைந்து வடுகிறது. . விளைபொருள்இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர். கருவி நூல்
சான்றடைவு |
Portal di Ensiklopedia Dunia