திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (நூல்)
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், டாக்டர். உ.வே.சாமிநாதையர் எழுதிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாறாகும். இந்நூல் 1933-இல் முதல்பதிப்பாக வெளியிடப்பட்டது.[1] அமைப்புஇந்நூல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னோரும் தந்தையாரும் என்ற தலைப்பில் தொடங்கி புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல் என்ற தலைப்பு வரை 24 தலைப்புகளோடு, செய்யுள் முதற்குறிப்பகராதி, சிறப்புப்பெயர் முதலியவற்றின் அகராதி ஆகியவற்றோடு முதல் பாகம் அமைந்துள்ளது. நூலாசிரியரை ஏற்றுக்கொண்டது முதல், இயல்புகளும் புலமைத்திறனும் வரை 12 தலைப்புகளோடு, நான்கு அநுபந்தங்களைக் கொண்டு, செய்யுள் முதற்குறிப்பகராதி, சிறப்புப்பெயர் முதலியவற்றின் அகராதி ஆகியவற்றோடு இரண்டாவது பாகம் அமைந்துள்ளது. மேற்கோள்கள்திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்', நூல், (மறுபதிப்பு, 1986; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) |
Portal di Ensiklopedia Dunia