திருக்கனூர்
திருக்கனூர் (Thirukkanur) இந்தியாவின், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வில்லியனூர் வட்டம் மற்றும் மண்ணாடிப்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 16 கிராமங்களில் ஒன்றாகும்.[1] இந்த கிராமமானது தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள எல்லைகளின் ஒன்றாகும். இங்கு சுகாதார நிலையம், காவல் நிலையம், தபால் நிலையம், மின்சார அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.[2] இந்த கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கிராமத்தில் உள்ள சந்தைகளில் கிடைக்கின்றது. போக்குவரத்துஇது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு நடுவே உள்ளது. இங்கிருந்து விழுப்புரம் 21 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி 24 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள விமான நிலையம், புதுச்சேரி விமான நிலையம் (25 கி.மீ) ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia