திருக்காட்கரை
![]() திருக்காட்கரை (Thrikkakkara) என்பது கொச்சி நகரத்தில் உள்ள ஒரு பகுதியாகும். அதே போல் இந்தியாவின் கேரள மாநிலமான எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியுமாகும். [1] நகராட்சியில் மரோட்டிச்சுவடு உட்பட 43 வார்டுகள் உள்ளன. [2] ஓணம் பண்டிகையிலும், அதனுடன் தொடர்புடைய கதையிலும் புகழ்பெற்ற திருக்காட்கரை கோயிலுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இது குறிப்பாக குறிப்பிடத்தக்கது. இந்த ஊர் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தாயகமாகும். அரசுக்கு சொந்தமான மாதிரி பொறியியல் கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது. பவன் வருணா வித்யாலயா, கார்டினால் மேல்நிலைப்பள்ளி, கொச்சின் பொதுப் பள்ளி மற்றும் பாரத் மாதா கல்லூரி போன்ற கல்லூரிகள் போன்ற பல பிரபலமான பள்ளிகளும் இங்கு உள்ளன. ![]() சொற்பிறப்பியலும் ஓணம் திருவிழாவும்திருக்காட்கரை என்ற பெயர் திரு கால் கரை என்ற வார்த்தையின் உருவான உச்சரிப்பாகும். இதன் பொருள் புனித பாதத்தின் இடம் என்பதாகும். இது ஓணம் பண்டிகையின் பின்னணியில் உள்ள கதையுடன் இணைகிறது. அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும். ஓணத்தின் புராணக்கதையைத் தொடர்ந்து, இந்த ஊர் அதனுடன் தொடர்புடைய திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலைக் கொண்டுள்ளது. இங்குள்ள தெய்வம் வாமனன். இது இந்தியாவின் மிகக் குறைந்த வாமனர் கோயில்களில் ஒன்றாகும். உலகளவில் ஓணம் கொண்டாட்டங்களின் மையமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. [3] [4] இந்த விழாவில் பெரும்பாலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். [5] ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். பக்தர்கள் பொது விருந்துகளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். ஏராளமான கடைகள் இதை ஒரு வர்த்தக கண்காட்சியாக ஆக்குகின்றன. கொண்டாட்டத்தின் முடிவில் ஒரு குறிப்பிடத்தக்க பட்டாசு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ![]() மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia