திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
![]() ![]() திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Tiruchirappalli) தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பின்புலம்இந்த அருங்காட்சியகம் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2][3] இதற்கு முன்பு சேலம் மற்றும் மதுரை அருங்காட்சியகங்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டன.[4] முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் அரசு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1997 இல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு மாற்றப்பட்டது.[5] அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.[6] காட்சிப் பொருட்கள்![]() அருங்காட்சியகத்தில் 2000 பொருட்கள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது.[5] உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுக்கால தொல்பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.[6] புகைப்படங்கள்அரிய ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள், ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கிக் குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல். நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்புப் பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.[4] வெளிப்புற காட்சிகள்வெளிப்புறப் பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புறப் பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சுமார் 45 இந்து மதம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.[7] சூழலியல் பிரிவுஅருங்காட்சியகத்தில், அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது. இந்து மத கடவுள்களான கிருஷ்ணா, துர்க்கை, திருமால் மற்றும் நடராஜரின் காட்சிகளைக் காண்பிக்கும் அரிய தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia