திருச்சி சங்கரன்திருச்சி சங்கரன் (பிறப்பு: ஜூலை 27, 1942) தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிராவும் வாசிக்கக்கூடியவர். இவர் பாடலாசிரியராகவும், இசையாசிரியராகவும் விளங்குகிறார். ஆரம்பகால வாழ்க்கைதிருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர் தனது உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமனிடம் இசைப் பயிற்சியை தொடங்கினார். பிறகு பழனி சுப்பிரமணிய பிள்ளையிடம் மிருதங்கம் கற்றார். திருச்சிராப்பள்ளியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் தனது 13 ஆம் வயதில் அரங்கேறினார் திருச்சி சங்கரன். தொழில் வாழ்க்கைஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
மேலும் புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் நிகழ்த்திய தனி வாத்திய இசை நிகழ்ச்சிகளில் திருச்சி சங்கரன், பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். இசை பயிற்றுவித்தல்கனடாவின் தலைநகர் டொரண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருக்கிறார். பல்வேறு பட்டறைகளையும் உரைகளையும் கீழ்காணும் கல்வியகங்களில் நிகழ்த்தியுள்ளார்:
இவர் கலாலயம் எனும் அமைப்பை உருவாக்கி, அதன் இயக்குனராகவும் இருக்கிறார். 'புதுக்கோட்டை பாணி' தாள வாத்திய இசைக்கென உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக கலாலயம் உள்ளது. தெற்காசியா மற்றும் வட அமெரிக்காவைச் சார்ந்த மாணவர் பலருக்கு மிருதங்கம், கஞ்சிரா, கடம், தபேலா மற்றும் மேற்கத்திய தாள வாத்திய இசைக்கருவிகளை கற்றுத் தந்து வருகிறார். எழுதியுள்ள புத்தகங்கள்
விருதுகள்
மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia