திருப்பல்லாண்டு வியாக்கியானம்

திருப்பலலாண்டு வியாக்கியானம் [1] என்பது பெரியாழ்வார் திருமொழி முதல் நான்கு பத்துக்கும் எழுதப்பட்ட விரிவுரை ஆகும். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் முழுமைக்கும் மணிப்பிரவாள நடையில் வியாக்கியானம் எழுதினார். அவற்றில் பெரியாழ்வார் திருமொழி முதல் நான்கு பத்துக்கும் எழுதப்பட்ட உரை கிடைக்கவில்லை. இந்தப் பகுதிக்கு மட்டும் மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.

இந்த உரை மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருப்பினும் சில இடங்களில் நல்ல தமிழ்நடையும் இதில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு

"முதல் பாட்டில் அவர் தொடர்ந்து வந்தபடி சொன்னார். இப்பாட்டில் தாம் மேல் விழுந்தபடி சொல்கிறார். திருவடிகளிலே தொடர்ந்த திருவுள்ளம் திருப்பரியட்டத்தின் மேல் சேர்ந்தபடி எங்ஙனே எனில், தான் அறிந்து சேரில் விசயத்தின் போக்கியத்துக்குக் குற்றமாம். ஆகையால் போக்கியத்துக்கு அளவுபட்டதும் அல்ல, ஆசைத் தலைமடிந்ததும் அல்ல. கடல் ஓதம் கிளர்ந்து அலைக்கப் புக்கால் உள்ளே கிடந்ததொரு துரும்பு கடலை அளவிட்டல்லவே கரை ஏறுவது. ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனையிறே"

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya