திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்
திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார் (List of papabili in the 2013 papal conclave) என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பதினாறாம் பெனடிக்டிக்குப் பின் எந்த கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தி ஊடகங்கள் கணிக்கின்ற பெயர்ப் பட்டியல் ஆகும்.
வத்திக்கான் பற்றிய செய்தித்துறை அறிஞர்களிடையே வழங்கும் ஒரு கூற்று இது: "தேர்தல் அவைக்குள் திருத்தந்தையாக நுழைபவர் கர்தினாலாகத் திரும்பி வருவார்".[1]
கடந்த சுமார் 650 ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லாத் தேர்தல்களிலும் ஒரு கர்தினால்தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்தினால்மார் குழுவுக்கு வெளியிலிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி திருத்தந்தை ஆறாம் அர்பன் ஆவார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1378.[2]
வெவ்வேறு செய்தி ஊடகங்களின் கணிப்பின்படி 2013 தேர்தலில் முன்னணி கர்தினால்மார்
நீதி மற்றும் அமைதி வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்
64
2003
குறிப்பு: மேலே தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அல்ல. செய்தி ஊடகங்கள் கணிப்புப்படி யார் 2013 திருத்தந்தைத் தேர்தலில் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றவொரு ஊகத்தின் அடிப்படையிலேதான் இப்பட்டியல் உருவாக்கப்பட்டது.
திருத்தந்தை பணி துறந்தாலோ, பதவியில் இறந்தாலோ, வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் மைய நிர்வாகத்தின் துறைகளில் பணிபுரிவோர் பெரும்பான்மையோர் தம் பதவியை இழப்பர்.[17] பதினாறாம் பெனடிக்ட் பதவி துறந்த வேளையில் கர்தினால்மார் வகித்த கடைசி பதவி மேலே உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது.
↑Jr., Rev. John Trigilio; Brighenti, Rev. Kenneth (10 மார்ச் 2011). Catholicism For Dummies. John Wiley & Sons. pp. 39–. ISBN9781118053782. Retrieved 21 பெப்ரவரி 2013.
↑Gurugé, Anura (2010). The Next Pope: After Pope Benedict XVI (1st Ed. ed.). Alton, N.H.: WOWNH. p. 34. ISBN978-0615353722. {{cite book}}: |edition= has extra text (help)