திருமூர்த்தி அணை
திருமூர்த்தி அணை இந்திய ஒன்றியத்தின் தமிழ்நாடுஅரசின் ஆளுகையில் உள்ள திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.[3]. இந்திய தர நிர்ணய அமைவனதில் இவ்வணை ஆனது இடைநிலை நீர்த்தேக்கம் ஆகும். துவக்கம்இந்த அணையானது பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) 1967 ஆம் ஆண்டில் பாலாறின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நீர்வரத்துபி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.[4] இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைதொடர்களில் உள்ள ஆனை மலை அருவி, ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அணையின் நீரியல்
பாசன பகுதிகள்பி.ஏ.பி. பாசனதிட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புறகிராம மக்கள் பயன்பெறும் வகையில் பூலாங்கிணர், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் கணக்கம்பாளையம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. நுன் புனல் மின் நிலையம்இந்த அணையானது 1967 ஆம் ஆண்டு விவசாய நீர் பாசனத்திற்கு என்ற குறிகோளுடன் கட்டப்பட்டாலும் இவ்வணைக்கு வரும் நீர்வரத்து வீணாக்காமல் நுன் புனல் மின் நிலையம் 9.9 கோடி செலவில் 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு மின் விநியோகம் 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. நுன் புனல் மின் நிலையம் 2050 மி.மீ விட்டம் கொண்ட நீர் குழாய் மூலம் கப்பலான் சுழலிகள் 3X650 கி.வாட் மாறுதிசைமின் சுழலிகளுடன் பற்சக்கரக் கூடு (gear box) இன்றி நேரடியாக இணைக்கபட்டுள்ளது. இது ஓர் ஆண்டிற்கு பயன்படும் மின் ஆற்றலாக 3.61 ஜிகாவாட்/மணி என்பதாக உள்ளது. சுற்றுலா தலம்![]() இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது. அமலிங்கேசுவரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது. சற்றே மலையேற்றத்தில் பஞ்சலிங்க அருவி என அழைக்கப்படும் அருவியொன்று உள்ளது. அணையின் நீர்த்தேக்கத்தில் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி - கோவை நெடுஞ்சாலையில் உடுமலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகாமையில் உள்ள அமராவதி அணையும் முதலைப் பண்ணையும் சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்கின்றன. மேலும் பார்க்கவெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia