திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் (Regional Cancer Centre, Thiruvananthapuram) இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் தொட்டர்பான ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமும் கேரள அரசாங்கமும் சேர்ந்து இப்புற்றுநோய் மையத்தை நிறுவின.[1]கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் கதிர்வீச்சு சிகிச்சை / கதிரியக்க சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கமாக முதலில் மையம் நிறுவப்பட்டது. அனைத்து வகையான புற்றுநோய்களின் மேலாண்மைக்கான மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாக மையம் செயல்பட்டது. குருதியியல், நிணநீர்வலையுரு, மெல்லிழைத்தாள், எலும்பு, தலை மற்றும் கழுத்து, மார்பு, மார்பகம், மத்திய நரம்பு மண்டலம், மகப்பேறியல் சார், சிறுநீரகம், இரைப்பை, குழந்தைகள் புற்றுநோயியல், தைராய்டு போன்றவற்றுடன் தொடர்புடைய புற்றுநோய்களுக்கு பிரதானமாக இம்மையத்தின் சிகிச்சையகங்களில் சிகிச்சையளிக்கப்படுகின்றன. பின்னணிஇந்தியாவில் தொடங்கப்பட்ட ஆறு புற்றுநோய் மையங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்பொழுது நாடெங்கிலும் மொத்தம் 26 மையங்கள் உள்ளன. இம்மையம் உருவான காலத்தில் கேரள மாநில அரசு, திருவனந்தபுரத்தில் இருந்த மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் சிகிச்சையில் முதன்மையாக கருதிய சில துறைகளை மண்டல புற்றுநோய் மையத்திற்கு மாற்றியது.[2][3] திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் என்பது கேரள அரசும் இந்திய அரசாங்கமும் இணைந்து நிதியுதவி செய்யும் ஒரு தன்னாட்சி அறிவியல் நிறுவனமாகும். இம்மையம் சுகாதாரத் துறையில் இயங்கும் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாநில அரசால் நியமிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் சமூக புற்றுநோயியல் பிரிவு 1985 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள இம்மையத்தில்தான் நிறுவப்பட்டது.[2] கணிப்பொறிபருவரைவு, ஓரகத்தனிம அலகிடுதல்போன்ற மேம்பட்ட நோயறிதல் வசதிகள்மற்றும்இலவசவேதிச்சிகிச்சைபோன்றவசதிகளைகுழந்தைகள் மற்றும் குறைந்த வசதிபடைத்த உறுப்பினர்கள் போன்ற சமூகத்தில் குறைந்த சலுகை பெறுபவர்களுக்கானபுற்றுநோய்சிகிச்சைவசதிகளை வழங்குவதற்கான கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை இந்த மையம் உருவாக்கியுள்ளது. இதனால்கிட்டத்தட்ட 60% நோயாளிகள் இலவச சிகிச்சையையும், நடுத்தர வருவாய் குழுவில் மேலும் 29 சதவீதத்தினர் மானிய விலையில் சிகிச்சையையும் பெறுகின்றனர்.குடும்ப வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச வேதிச்சிகிச்சைவழங்கப்படுகிறது.குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் உள்ள பெரியவர்களுக்கும் இலவச சிகிச்சை கிடைக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில், குறைந்த வருமானம் பெறும் சமூகப்பிரிவினருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 17,000எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் நோயாளிகள், 50,000எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பழைய நோயாளிகளின் தொடர் வருகைகள் மற்றும் 80,000பேருக்கும் மேற்பட்ட புற்றுநோய் அல்லாத நோயாளிகள் இம்மையத்திற்கு வருகைபுரிகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாத நோயாளிகள் என இரண்டையும் பதிவு செய்பவர்கள் எண்னிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரள அரசு திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய்மையத்தை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் சிறப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமாகவும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநில ஆராய்ச்சி அமைப்பாகவும் அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 16,000 புதிய நோயாளிகள் தென்னிந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த புற்றுநோய் நோயாளிகளில் கிட்டத்தட்ட 60%பேர் மருத்துவமனையில் முதன்மை கவனிப்பை பெறுகின்றனர். இதில் 70% நோயாளிகளுக்கும் அதிகமானவர்கள் கிட்டத்தட்ட இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள். 500நோயாளிகளுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ ஆலோசனை, பராமரிப்பு அல்லது தொடர் சிகிச்சைக்காக தினமும் மருத்துவமனைக்கு வெளியோயாளிகளாக வந்துபோகிறார்கள். மருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் தரவுகள் பதிவு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1982 ஆம் ஆண்டு இப்பிராந்திய புற்றுநோய் மையத்தில் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு 1982 ஆம் ஆண்டு சனவரி முதல் தேதி முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறீ அவிட்டம் திருநாள் மருத்துவமனை, திருவனந்தபுரம் பல் மருத்துவமனை போன்ற இடங்களிலிருந்து புற்றுநோயாளிகள் குறித்த தரவுகளைத் திரட்டி திருவனந்தபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைமையத்திற்கு அறிக்கை அளிக்கத் தொடங்கியது.[4]. இலக்குகள்திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் பின்வரும் நோக்கங்களைச் சந்திப்பதற்காக உருவாக்கப்பட்டது:
தகவல் அமைப்பு பிரிவுகள்மருத்துவமனை தகவல் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கணினி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகள் தகவல் அமைப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கணினி தொழில்நுட்பத்திற்கான மருத்துவமனைக் கொள்கையை உருவாக்கி அதை செயல்படுத்துவது இத்துறையின் முக்கியப் பொறுப்பாகும். விரிவான அமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சியை மேற்கொள்வது, அமைப்புகளின் செயலாக்கம் மற்றும் பயன்பாட்டிற்கு ஆதரவாக நிறுவன மற்றும் நிர்வாக மாற்றத்திற்கான பொறுப்புகளும் இத்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மெலும் செயல்பாட்டு அமைப்புகளை ஆதரித்தும், பராமரித்தும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறது. மருத்துவம், நிதி மற்றும் நிர்வாக பயன்பாடுகளை ஒருங்கிணைப்பதில் இத்துறை முக்கிய கவனம் செலுத்துகிறது. உயிரணு நோயியல் பிரிவுவழக்கமான திசுநோய்கூறியல் மற்றும் உயிரணுவியல் துறைகளின் ஆய்வுகளைத் தாண்டி உயிரணு நோயியல் பிரிவு கூடுதலான ஆய்வுகளை மேற்கொள்கிறது. மருத்துவப் படிமவியல் துறைபடிமவியல் மற்றும் அணுக்கரு மருத்துவப் பிரிவுகள் நோயறிதலை வழங்க மருத்துவப் படிமவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. வலி மேலாண்மைபுற்றுநோயின் மேம்பட்ட மற்றும் குணப்படுத்த முடியாத நிலைகளுக்கான வலி மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை போன்றவை இப்பிரத்யேக பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வளர்ச்சி
திருவனந்தபுரம் மண்டல புற்றுநோயியல் மையம் உலக சுஜாதார மையம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம் IAEA மற்றும் பன்னாட்டு புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் புற்றுநோய் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பயிற்சி மையமாகும். ஒரு முதுகலை கற்பித்தல் மையமான இந்நிறுவனம் கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை புற்றுநோயியல், மருத்துவ புற்றுநோயியல், குழந்தைகள் புற்றுநோயியல், கழுத்து மற்றும் தலை அறுவை சிகிச்சை, மற்றும் மகப்பேறியல் புற்றுநோயில் தொடர்பான மீச்சிறப்பு முனைவர் பட்ட படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. கதிரியக்கச் சிகிச்சை, உணர்வுநீக்க மருந்தியல், நோயியல் பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளும் இம்மையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இம்மையத்தில் 400 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மையத்தில் மருத்துவம் மற்றும் துணைமருத்துவத் துறைகளில் பயிற்சி பெறுகின்றனர். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia