திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரைதிருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை [1] நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருவருட்பயன் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைநூல் இது. இந்த உரையை எழுதியவர் நிரம்ப அழகிய தேசிகர். உரை தொடங்கும்போது ஒரு காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது.[2] அத்துடன் இவரே தன்னைப் பற்றியும், உரைநூலைப் பற்றியும் அறிமுகம் செய்துகொள்ளும் சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றும் உள்ளது.[3] இந்த உரையுடன் இந்த உரைநூலுக்குப் பின்னர் தோன்றிய 'வேலப்ப பண்டாரம் பதவுரையும் சிந்தனையுரையும்' என்னும் பகுதியும் சேர்த்து நூல் வெளியாகியுள்ளது. மற்றும் வெள்ளை வாரணர் விளக்கத்தோடு கூடிய பதிப்பும் வெளிவந்துள்ளது.[4] உரை தரும் குறிப்புகள்
திருவருட்பயன் குறள் வெண்பாவால் ஆன நூல். இந்தக் குறளால் இன்னது சொல்லப்பட்டது என்று ஒவ்வொரு குறளுக்கும் இந்த உரையானது விளக்கம் தருகிறது. அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia