திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வரநாத சுவாமி கோயில்
திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வரநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பாயும் கடனாநதிக் கரையில் அமைந்த பிரம்மதேசம் என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலைக் கட்டியவர் ராஜ ராஜ சோழன் ஆவார்.[1] வரலாறுராஜராஜ சோழன் பல கோயில்களை கட்டியிருந்தாலும், அவனது ஆட்சிக்காலத் தொடக்கத்தில், அவன் எழுப்பிய முதல் கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனாநதியின் தென்கரையில் பிரம்மாண்டமாக வாலீஸ்வரம் என்ற பெயரில் சிவன் கோயில் உள்ளது.[2] கோயில் அமைப்புஇக்கோயிலில் திருவாலீஸ்வரநாத சுவாமி, சிவகாமி அம்மாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia