திரைப்படத் தயாரிப்பு

திரைப்பட உருவாக்கம் அல்லது திரைப்பட தயாரிப்பு என்பது  ஒர் திரைப்படத்தை உருவாக்கும் செயன்முறையை குறிக்கின்றது. திரைப்பட தயாரிப்பு  பல சிக்கலான மற்றும் வேறுபட்ட படிநிலைகளைக் கொண்டது, இது மூலக் கதை அல்லது கதைகருவிலிருந்து ஆரம்பிக்கிறது. அதன்பின் தயாரிப்பு திரைக்கதை எழுதுதல், நடிகர்கள் தேர்வு, முன்-தயாரிப்பு, படப்பிடுப்பு, ஒலிப்பதிவு, பிந்தைய தயாரிப்பு மற்றும் முழுமையான திரைப்படத்தை பார்வையாளர்கள் முன் திரையிடல் போன்ற நிலைகளின்  ஊடாக தொடரும். இச்செயன்முறையானது பொதுவில் திரைப்பட இயக்குனர்கள் திரைக்கதை கிரம முறைப்படி அல்லாமலும், தேவையின்படி ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் படம்பிடிக்கவும், பின்னர் அதை படப்பொகுப்பின் மூலம் அவற்றை ஒன்றிணைப்பதாலும் வரிசைக்கிரமப்படி அமையாது. உலகம் முழுவதும்  பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைகளில் திரைப்பட உருவாக்கம் நிகழ்கிறது. மேலும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் சினிமா நுட்பங்களையும் பயன்படுத்தி திரைப்படங்கள்,  தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான எபிசோடிக் திரைப்படங்கள், இசைக்காணொளிகள், விளம்பர மற்றும் படிப்பிணைத்  திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆரம்ப காலங்களில் திரைப்படங்கள் படச்சுருள்களை பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டது என்றாலும் சமகாலத்தில் திரைப்பட உருவாக்கம் டிஜிட்டல் மயமாகியுள்ளது.  இன்று திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு ஒலி-ஒளிக் கதையை விநியோகத்திற்காகவும் திரையிடலுக்காகவும் வணிக ரீதியாக வடிவமைக்கும் செயன்முறையை குறிக்கிறது.

கட்டங்கள்

திரைப்படத் தயாரிப்பில் பல முக்கியமான கட்டங்கள் உள்ளன.[1]

  • தொடக்கம் - படத்துக்கான எண்ணக்கருவை உருவாக்குதல், ஏற்கனவே வேறொருவரால் எழுதப்பட்ட கதையாக இருந்தால் அதற்கான உரிமைகளை வாங்குதல், திரைக்கதை எழுதுதல், தேவையான நிதி வளங்களை ஒழுங்கு செய்தல் போன்றன இக்கட்டத்துள் அடங்கும்.
  • படப்பிடிப்புக்கு முந்திய கட்டம் (முன்-தயாரிப்பு) - இக்கட்டத்தில், படப்பிடிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும். நடிகர்கள் தேர்வு, படக்குழுவினர் தேர்வு என்பவற்றோடு, படப்பிடிப்புக்கான இடத்தேர்வு, காட்சியமைப்புக்களை உருவாக்குதல் என்பனவும் இக்கட்டத்தில் இடம்பெறும்.
  • படப்பிடிப்புக் கட்டம் (தயாரிப்பு) - எடிட் செய்யப்படாத படச்சுருள் மற்றும் திரைப்படத்திற்கு தேவையான அனைத்து கூறுகளும் இக்கட்டத்திலேயே துண்டுதுண்டாகப் படம் பிடிக்கப்படும்.
  • படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டம் (பிந்தைய தயாரிப்பு) - இந்தக் கட்டத்தில் துண்டு துண்டாக பதிவுசெய்யப்பட்ட திரைப்படத்தில் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டு இறுதி தயாரிப்பாக தொகுக்கப்படும்.
  • திரைப்பட விநியோகம் - முழுமையாக தயாரிக்கப்பட்ட படம் திரைப்படம் விநியோகிக்கப்படுவதும், சந்தைப்படுத்தப்படுவதும், விநியோகத்தர்கள் ஊடாகத் திரையரங்குகளில் திரையிடப்படுவதுடன், குறுந்தட்டுகளாக வெளியிடுதல், தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு உரிமம் வழங்குதல் என்பனவும் இக்கட்டத்துக்கு உரிய செயற்பாடுகள்.

மேற்கோள்களை

  1. Steiff, Josef (2005). The Complete Idiot's Guide to Independent Filmmaking. Alpha Books. pp. 26–28.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya