திரைப்பட விழா![]() திரைப்பட விழா (Film festival) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளில் அல்லது திரையிடும் வசதியுள்ள சிறப்பு அரங்குகளில் குறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையிட்டு விவாதிப்பது, விளக்குவது, மற்றும் தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவது போன்ற பல நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் ஒரு கலை விழாவாகும். பொதுவாக ஒரு நகரம் அல்லது பிராந்தியத்தில் இவ்விழா நடைபெறுகின்றன. திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் பொருத்தமான திறந்த வெளி அரங்கிலும் திரையிடப்படுவதுண்டு[1]. திரையிடப்படும் திரைப்படங்கள் சமீபத்திய தேதிகளில் திரையிடப்பட்டதாக இருக்கலாம். நடத்தப்படும் திரைப்பட திருவிழாவின் நோக்கத்தைப் பொறுத்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்களின் வெளியீடுகளும் விழாக்களில் சேர்க்கப்படுகின்றன. திருவிழாக்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது திரைப்பட வகையை சேர்ந்த படங்களை திரையிடுவதில் கவனம் செலுத்துகின்றன. குழந்தைகள் திரைப்பட விழா, ஈரானிய திரைப்படங்கள், போன்றவற்றை சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். பல திரைப்ப விழாக்கள் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை மட்டும் மையமாகக் கொண்டும் நடக்கின்றன. இவ்வகை திரைப்படங்கள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச நீளத்தை மையமாகக் கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. திரைப்பட விழாக்கள் பொதுவாக ஆண்டு நிகழ்வுகளாகும். யெர்ரி பெக்[2] உள்ளிட்ட சில திரைப்பட வரலாற்றாசிரியர்கள் திரைப்பட விழாக்களை அதிகாரப்பூர்வமாக திரைப்படம் வெளியிடும் இடங்களாகக் கருதுவதில்லை. பிரான்சு நாட்டின் கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கான் திரைப்பட விழா, செருமனியின் பெர்லின் நகரில் நடைபெறும் திரைப்பட விழா, இத்தாலியின் வெனிசு நகரத்தில் நடைபெறும் திரைப்பட விழா போன்றவை உலகின் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களாகக் கருதப்படுகின்றன . இந்த பன்னாட்டு திரைப்பட விழாக்கள் மூன்றையும் சேர்த்து சில நேரங்களில் "பெரிய மூன்று" என்று அழைக்கிறார்கள்[3][4][5].அமெரிக்காவின் டொராண்டோ பன்னாட்டு திரைப்பட விழா வருகை அடிப்படையில் வட அமெரிக்காவின் மிகவும் பிரபலமான விழா என்று டைம் பத்திரிகை எழுதியது[6]. வெனிசு திரைப்பட விழா உலகின் மிகப் பழமையான திரைப்பட விழாவாகும்[7]. வரலாறுஇத்தாலியில் வெனிசு திரைப்பட விழா 1932 ஆம் ஆண்டில் தொடங்கியது, இது இன்றும் நடைபெற்றுவரும் மிகப் பழமையான திரைப்பட விழாவாகும். ரெய்ன்டான்சு திரைப்பட விழா என்பது இங்கிலாந்தில் திரைப்படத் தயாரிப்பை முன்னிலைப்படுத்தி நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டமாகும், இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இலண்டனில் நடைபெறுகிறது[8]. ஐரோப்பா கண்டத்தின் இசியூ ஐரோப்பிய தனிநபர் திரைப்பட விழா ஒரு மிகப்பெரிய தனிநபர் திரைப்பட விழாவாகும். இது 2006 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு வசந்த காலமும் பிரான்சின் பாரிசு நகரில் நடைபெற்று வருகிறது[9]. எடின்பர்க் சர்வதேச திரைப்பட விழா என்பது கிரேட் பிரிட்டனில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் திரைப்பட திருவிழாவாகவும் உலகின் மிக நீண்ட திரைப்பட விழாவாகவும் கருதப்படுகிறது. ஆத்திரேலியாவின் முதல் மற்றும் மிக நீண்ட திரைப்பட விழா மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவாகும். இது 1952 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிட்னி திரைப்பட விழா 1954 இல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வட அமெரிக்காவின் முதல் மற்றும் நீண்ட காலமாக இயங்கும் குறும்பட விழா 1947 இல் நிறுவப்பட்ட யார்க்டன் திரைப்பட விழாவாகும் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் திரைப்பட விழா கொலம்பசு பன்னாட்டு திரைப்படம் மற்றும் காணொளி விழாவாகும்[10][11]. இதை தி கிறிசு விருதுகள் என்றும் அழைக்கிறார்கள். இது 1953 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இவ்விழா அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க ஆவணப்படம், கல்வி, வணிக மற்றும் தகவல் போட்டிகளில் ஒன்றாகும் என்று .சான் பிரான்சிசுகோவில் உள்ள பிலிம் ஆர்ட்சு அறக்கட்டளை தெரிவிக்கிறது. வட அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மிகப் பழமையான திரைப்பட விழா தி கிறிசு விருதுகள் விழாவாகும். 54 வது ஆண்டு கொண்டாட்டம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 1957 இல் சான் பிரான்சிசுகோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. . நாடகத் திரைப்படங்களுக்கு இவ்விழா முக்கியத்துவம் கொடுத்தது. அமெரிக்க பார்வையாளர்களுக்கு வெளிநாட்டு திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதில் இந்த விழா முக்கிய பங்கு வகித்தது. அங்கு முதல் ஆண்டில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் அகிரா குரோசாவாவின் சிம்மாசனம் மற்றும் சத்யஜித் ராய்யின் பதேர் பாஞ்சாலி ஆகியவை அடங்கும் . இன்று, உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன - சன்டான்சு திரைப்பட விழா மற்றும் சிலாம்டான்சு திரைப்பட விழா, டெர்ரர் திரைப்படவிழா மற்றும் இசையை இரசிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் அமெரிக்க திரைப்பட விழா.என்று திரைப்பட விழாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. உற்பத்தி செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டபோதும்,, திரைப்படத் தயாரிப்பின் ஒத்துழைப்புக்கு இணைய தொழில்நுட்பம் அனுமதிக்க தொடங்கிய போது எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக திரைப்பட நிதிப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.. மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia